53 வயசு பமீலா ஆன்டர்சன் 5வது திருமணம்.. பாடிகார்டு கூட! "இதுக்கா அந்த பேச்சு.." ரசிகாஸ் கடுப்ஸ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சமூக வலைதளப் பக்கங்கள் அனைத்திலிருந்தும் விலகி இயற்கையோடு இணைந்து வாழ போகிறேன் என்று பயங்கர பஞ்ச் டயலாக் பேசிவிட்டு கிளம்பிய, பமீலா ஆண்டர்சன் 5வதாக ஒருவரை, அதுவும் தனது பாடிகார்டை திருமணம் செய்துள்ளார்.

'பேவாட்ச்' நடிகை பமீலா ஆண்டர்சனுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வயது இப்போது 53. ஆனாலும் எப்போதும் ரசிகர்களின் கனவுக்கன்னி என்று சொல்லலாம்.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்க கூடியவர் பமீலா ஆண்டர்சன். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு 1.2 மில்லியன் பாலோவர்கள் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளம்

இந்த நிலையில்தான் என்ன ஆயிற்றோ தெரியவில்லை. இந்த மாத இறுதியில் இருந்து திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகப் போவதாக சொல்லிவிட்டார் பமீலா ஆண்டர்சன். ரசிகர்கள் துடித்துப் போய்.. ஏன்? எதற்கு என்று கேட்டு அன்புத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். அதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தார் பமீலா ஆண்டர்சன்.

கடைசி போஸ்ட்

கடைசி போஸ்ட்

"இதுதான் இன்ஸ்டாகிராம்.. டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் எனது கடைசி போஸ்ட். சமூக வலைதளங்கள் மீது எனக்கு இனியும் ஆர்வமில்லை. வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புகிறேன். படிப்பதிலும், இயற்கையோடு வாழ்வதிலும் எனக்கு விருப்பம். உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கு நன்றி. காலத்தையும் நேரத்தையும் வீணாக்குவதில் மகிழ்ச்சி அடையாமல் உங்களது நோக்கத்தை வலிமையாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்" இவ்வாறு பமீலா ஆண்டர்சன் திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.

உருகிய ரசிகாஸ்

உருகிய ரசிகாஸ்

ரசிகர்களும்.. "உங்களைப் பிரிந்து எப்படி இருக்கப் போகிறோமோ.." என்று பின்னூட்டத்தில் உருகி வழிந்தனர். ஆனால் பமீலா ஆண்டர்சன் காதும் காதும் வைத்த மாதிரி 5வது திருமணம் செய்துவிட்டுதான், இப்படி அட்வைஸ் மழை பொழிந்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாடிகார்டுடன் திருமணம்

பாடிகார்டுடன் திருமணம்

ஆங்கில ஊடகத்திற்கு, பமீலா ஆண்டர்சன் அளித்துள்ள பேட்டியில் தனது பாடிகார்டு டான் ஹேஹர்ஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறி உள்ளார். கிறிஸ்மஸ் நாளுக்கு முந்தைய தினம் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. என்னை நிஜமாக விரும்பும் ஒருவரின் கரங்களில் நான் இப்போது தஞ்சம் அடைந்துள்ளேன், கடந்த ஒரு வருடமாக அவர் எனக்கு பழக்கம். ஆனால் ஏழு ஜென்மங்கள் இணைந்து இருந்ததை போல உணர்ந்தேன். எனவே அவரை திருமணம் செய்தேன் என்று உருகியுள்ளார் பமீலா.

பமீலா திருமண வாழ்க்கை

பமீலா திருமண வாழ்க்கை

பமீலா முன்பு 1995 முதல் 1998 வரை டாமி லீ என்பவரை மணந்தார். பிரண்டன் மற்றும் டிலான் ஆகிய குழந்தைகளை பெற்றெடுத்தார்.
பின்னர் அவர் 2006 ஆம் ஆண்டில் கிட் ராக் என்பவரை மணந்தார். திருமணம் ரத்து செய்யப்படுவதற்கு முன்னர் 2007ல் தயாரிப்பாளர் ரிக் சாலமன் என்பவரை மணந்தார். பின்னர் அவரை 2013ல் திரும்ப மணம் செய்து கொண்டார். 2020 ஆம் ஆண்டில் தொழிலதிபர் ஜான் பீட்டர்ஸை இவர் மணந்ததாக தகவல் வந்தது. ஆனால் அது வதந்தி என்று மறுத்தார் பமீலா.

பமீலா ஆன்டர்சன் மீது செல்ல கோபம்

பமீலா ஆன்டர்சன் மீது செல்ல கோபம்

எனது தாத்தா பாட்டியிடம் 25 வருடங்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற, வேன்கூவர் தீவு இடத்தில் வைத்து எனக்கு திருமணம் நடைபெற்றது. இங்குதான் எனது பெற்றோர்கள் திருமணம் நடைபெற்றது. இன்றுவரை அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். எனவே நான் ஒரு முழு வட்டத்தை அடைந்து விட்டதாக நினைக்கிறேன், என்று தனது திருமணத்தை பற்றி புகழ்ந்து பேசுகிறார் பமீலா ஆண்டர்சன். இதை சோஷியல் மீடியாவிலேயே அவர் சொல்லியிருக்கலாமே, ஏன் இப்படி, அட்வைஸ் மழை பெய்துவிட்டு அப்பீட் ஆகிவிட்டார் என்று கடுப்பில் உள்ளனர் ரசிகாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+