அத்தனையும் "ஆபாசம்.." பாலியல் கதை எழுத சொன்ன பள்ளி! இதெல்லாம் ஒரு ஹோம் ஒர்க்கா! பெற்றோர் கொந்தளிப்பு
அமெரிக்காவில் பள்ளி ஒன்று தனது மாணவர்களுக்குச் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளி ஒன்று தங்கள் மாணவர்களுக்கு அளித்துள்ள ஹோம் ஒர்க் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆபாசமாக இருக்கும் அதை எப்படி பள்ளி அளிக்கலாம் என்று பலரும் சாடி வருகின்றனர்.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கல்வி முறை சிறப்பாக இல்லை என்ற புகார் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல கல்வி நிறுவனங்களில் இருக்கும் ரூல்ஸ் எல்லாம் சில நேரங்களில் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் உள்ளது.
இப்போதும் அப்படியொரு சர்ச்சையில் தான் அங்குள்ள பள்ளி ஒன்று சிக்கியுள்ளது. அமெரிக்காவில் ஓரிகானில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் கொடுத்துள்ள ஹோம் ஒர்க் தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

அமெரிக்கா
அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள பள்ளி ஒன்று, அதன் மாணவர்களுக்குச் சர்ச்சைக்குரிய ஹோம் ஒர்க் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது சுவையூட்டும் சிரப், மசாஜ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி, பாலியல் கற்பனை கதையை உருவாக்குமாறு அந்த பள்ளி ஹோம் ஒர்க் கொடுத்துள்ளது. ஓரிகானில் யூஜினில் அமைந்துள்ள சர்ச்சில் உயர்நிலைப் பள்ளியில் சயின்ஸ் வகுப்பில் தான் மாணவர்களுக்கு இந்த ஹோம் ஒர்க் கொடுத்துள்ளனர்.

பாலியல் கதை
செக்ஸ் டாய்ஸ் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பாலியல் கற்பனை கதையை எழுதச் சொல்லி ஹோம் ஒர்க் கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தான் அங்குள்ள மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த பாடத்திட்டத்தை அங்குள்ள உள்ளூர் அமைப்பு அங்கீகரித்துள்ளது. அப்படி அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து தான் இந்த ஹோம் ஒர்க்கை கொடுத்துள்ளனர்.

சர்ச்சை
மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாடத்தில், "நீங்கள் ஒரு சிறுகதையை எழுத வேண்டும். இதில் உடலுறவு (பாலியல் நோய்களைப் பரப்பும் என்பதால்) குறித்து எந்தவொரு கருத்தும் இருக்கக் கூடாது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில், "நீங்கள் எழுதும் கதையில் பயன்படுத்த 3 பொருட்களை (ரொமேன்டிக் இசை, மெழுகுவர்த்தி, மசாஜ் எண்ணெய், இறகுகள், சுவையூட்டும் சிரப்) பயன்படுத்தலாம். நெருக்கமான கதையாக இருக்கலாம்.

கொந்தளித்த பெற்றோர்
ஆனால், உடலுறவு கொள்ளாமலேயே உடல் பாசத்தைக் காட்டவும் பெறவும் முடியும் என்பதை உங்கள் கதை காட்ட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது. இது மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த ஹோம்ஒர்க்கை சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இதைப் படித்ததும் அதிர்ந்து போன பெற்றோர்கள், இதுபோல எப்படி வீட்டுப்பாடத்தைக் கொடுக்கலாம் என்று ஆவேசமாகச் சாடி வருகிறார்கள். சில மணி நேரத்தில் பள்ளியில் படிக்கும் பல நூறு மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அரசு ஒப்புதலா
மாணவர் ஒருவரின் பெற்றோரான கத்தரின் ரோஜர்ஸ், "அங்கு வேலை செய்யும் கிர்க் மில்லர் என்ற ஆசிரியர் இந்த "பாலியல் கற்பனை" கதையை ஹோம் ஒர்க்காக கொடுத்துள்ளார். இதுபோன்ற செயல்கள் மாணவர்கள் பாதிக்கும். அவர்களைத் தாழ்வாக உணர வைக்கும். மேலும், மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற பாடத்திட்டத்தை எப்படி அனுமதிக்கலாம். இது மாணவர்களையே தவறாக வழிநடத்தும்" என்றும் சாடியுள்ளார்.

அமெரிக்க கல்வி முறை
அமெரிக்காவில் கல்வி முறை மீதே பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர். அங்குக் கல்லூரி படிப்புகளைப் பணக்காரர்கள் மட்டுமே கடன் வாங்காமல் படிக்கலாம் என்ற சூழல் இருக்கிறது. அதேபோல பள்ளிகளை முடிக்கும் அனைவரும் கல்லூரிகளில் சேர்வதில்லை. அதில் ஒரு பகுதியினர் மட்டுமே கல்லூரிகள் பக்கம் போகிறார்கள். அதை முடிப்பவர்கள் அதிலும் ஒரு பகுதியினர் தான். பள்ளிகளுமே கூட வெள்ளை இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே நல்ல பள்ளிகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications