“நாங்க கேட்டது இது கிடையாது..” ஈரானின் நிபந்தனைகளை நிராகரித்த டிரம்ப்! மோசமடையும் நிலைமை
வாஷிங்டன்: அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று, ஈரானுக்கு டிரம்ப் கெடு விதித்திருந்த நிலையில், ஈரான் அதை ஏற்க மறுத்துள்ளது. மட்டுமல்லாது, பதிலுக்கு 10 அம்ச டிமாண்ட்களை முன் வைத்திருக்கிறது. இதனை டிரம்ப் ஏற்க மறுத்துள்ளார்.
ஈரான் தனது 10 அம்ச அமைதித் திட்டத்தை சமர்ப்பித்த போதிலும், அது போதாது என ட்ரம்ப் நிராகரித்துள்ளார். அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை) ஒரு உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நேரத்திற்குள் ஈரான் இணங்காவிட்டால், அந்நாடு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், ஈரானின் மீது நரகத்தையே ஏவிவிடுவேன் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதே அமெரிக்காவின் முதன்மை இலக்கு என்பதை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானை பொறுத்தவரை, ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை ஏற்கவில்லை. மாறாக பிராந்தியத்தில் அனைத்து மோதல்களும் முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சீரமைப்பதற்கான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் எனவும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications