படிச்சு, படிச்சு சொன்ன பென்டகன்.. சுத்தமா கேட்கலையே டிரம்ப்! இப்போ பாருங்க.. சொன்னபடியே ஆயிடுச்சு!
வாஷிங்டன்: ஈரான் விஷயத்தில் இறங்குவதற்கு முன்னர், டிரம்புக்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் சில எச்சரிக்கையை விடுத்திருந்தது. ஆனால், அதையெல்லாம் டிரம்ப் வழக்கம் போல லெப்ட் ஹாண்டில் டீல் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது பெண்டகன் சொன்னது போலவே நடந்திருக்கிறது. இதனால் டிரம்ப் மீதான விமர்சனங்கள் உள்நாட்டிலேயே அதிகரித்திருக்கின்றன.
டிரம்ப் அமெரிக்காவுக்கு அதிபராக இருக்கலாம்.. ஆனால், எடுத்த உடனேயே போருக்கு போய்விட முடியாது. ராணுவத்திடம் ஆலோசனை நடத்தனும். அப்படியான ஆலோசனையின்போது, பெண்டகன் கொடுத்த வார்னிங் எதையும் டிரம்ப் கேட்கவில்லை. இப்போது நிலைமை கைமீறியிருக்கிறது என்பதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியிருக்கிறது.

பெண்டகன் சொன்னது என்ன?
JCS படைத்தளபதிகள்: அமெரிக்க ராணுவத்தின் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை மற்றம் கடலோர பாதுகாப்பு படை ஆகியவற்றின் கூட்டு குழு, டிரம்புக்கு வார்னிங் கொடுத்திருக்கிறது. இந்த அதிகாரிகள் உலகளாவிய போர் சூழலை கணித்து, அமெரிக்க ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு வழிகாட்டக்கூடியவர்கள். இவர்கள்தான் ஆயுத கையிருப்பு குறித்து எச்சரித்துள்ளனர்.
CENTCOM அதிகாரிகள்: கத்தார், ஈராக், சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்புக்கு பொறுப்பான ராணுவ பிரிவுதான் இந்த CENTCOM. இதன் தலைமையகம் புளோரிடாவில் இருந்தாலும், செயல்பாட்டு மையம் கத்தாரில்தான் இருக்கிறது.
வார்னிங் கொடுத்த அதிகாரிகள்
இந்த இரண்டு அமைப்பும், டிரம்புக்கு வார்னிங் கொடுத்திருக்கின்றன. ஈரானுக்கு எதிராக சண்டையில் இறங்கினால், அந்நாடு ஹர்முஸ் நீரிணையை மூடிவிடும் என்று எச்சரித்தன. ஆனால், டிரம்ப் இதை கண்டுக்கொள்ளவில்லை. ஈரான் நம்முடைய ராணுவ பலத்தை பார்த்து பயந்துவிடும் என்றும், அப்படியே மூடினாலும் அதை நாம் மீண்டும் திறந்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்.
மழுப்பிய டிரம்ப்
ஆனால், கடந்த 13 நாட்களாக ஹர்முஸ் மூடப்பட்டிருக்கிறது. உலக அளவில் 20-30% கச்சா எண்ணெய் விநியோகம் இந்த பாதையில்தான் நடக்கிறது. இது மூடப்பட்டதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மறுபுறம் அமெரிக்க படைகளிடம் ஆயுதங்கள் வேகமாக தீர்ந்து வருகின்றன. இந்த ஆயுதங்களை உற்பத்தி செய்ய மாதக்கணக்கில் ஆகும். எனவே இஸ்ரேலை பாதுகாக்க முடியாது என்று அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் கைவிடலாம்.
கைவிட்ட அமெரிக்கா
ஏற்கெனவ, ஹர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பென்டகனின் வார்னிங் குறித்த தகவல்கள், 'வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல்' ஊடகம் வழியாக வெளியாகியுள்ளதால்.. உள்நாட்டிலேயே டிரம்புக்கு எதிரான குரல்கள் வலுத்துள்ளன.
-
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications