அமெரிக்காவை உலுக்கிய மில்டன் புயல்! பாதிக்கப்பட்ட இடங்கள் எப்படி இருக்கு பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகணத்தில் நேற்று இரவு மில்டன் புயல் கரையைக் கடந்தது. புயல் பாதிப்பினால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். புயல் பாதிப்பினால் ஏற்பட்ட சேத பகுதிகள் பற்றிய புகைப்பட தொகுப்பை இங்கே காணலாம்.
அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான புளோரிடா அடிக்கடி சூறாவளி தாக்கும் மாகாணங்களில் ஒன்றாக இருக்கிறது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் மழை சீசனின் ஏகப்பட்ட சூறாவளிகள் தாக்கும். குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் புயல்களின் தாக்கம் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு உருவான மில்டன் சூறாவளி புளோரிடா மக்களை அச்சுறுத்தியது. கடந்த பல ஆண்டுகளில் உருவானதிலேயே இது தான் மிகவும் வலுவான சூறாவளி எனச் சொல்லப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவில் நேற்றிரவு மில்டன் புயல் கரையைக் கடந்தது. அதிக ஆபத்தான 5ம் வகை சூறாவளியாக இருந்த மில்டன், புளோரிடாவில் உள்ள சியாஸ்டா கீயின் என்ற பகுதிக்கு அருகே நேற்று காலை வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்தது.
இருந்தாலும் பலத்த சேதத்தை புளோரிடா மாகாணத்தில் உள்ள பகுதிகள் சந்தித்தன. புயல் கரையை கடக்கும் போது சுமார் 195 கிமீ வேகத்தில் காற்று வீசி இருக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அது மட்டும் இன்றி சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதனால், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
சரசோடா கவுண்டி மற்றும் அதன் அருகில் உள்ள மனாடீ கவுண்ட் பகுதிகளில் தான் அதிக அளவிலான மின்தடை ஏற்பட்டுள்ளது. புளோரிடாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள புனித லூசி கவுன்டியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. புயல் கரையைக் கடந்த போது கனமழை கொட்டியது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆபத்து மிக்க இடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகணத்தில் நேற்று இரவு மில்டன் புயல் கரையைக் கடந்தது. புயல் பாதிப்பினால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். புயல் பாதிப்பினால் ஏற்பட்ட சேத பகுதிகள் பற்றிய புகைப்பட தொகுப்பை இங்கே காணலாம்.

#usmiltonhurricane pic.twitter.com/UXxIPiiDls
— S.ManiSingh (@s_manisingh) October 10, 2024
மில்டன் புயல் கரையைக் கடக்கும் தருணத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த எடுக்கப்பட்ட புகைப்படம். பூமியின் அமெரிக்கா இருக்கும் இடத்தை நோக்கி எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் புயல் வீசும் நேரம் வெள்ளை நிறத்தில் மேகம் சூழ்ந்திருந்ததை இதில் பார்க்கலாம்.

#USA #America pic.twitter.com/MOZDRwjNeu
— S.ManiSingh (@s_manisingh) October 10, 2024
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் காரணமாக பல கட்டிடங்களின் மேற்கூரைகள் அப்படியே கூண்டோடு பெயர்ந்து விழுந்தன. சில வீடுகள் அப்படியே தடைமட்டமாகின. மரங்கள், மின்கம்பங்கள் சூறாவளிக்காற்றில் வேரோடு சாய்ந்து விழுந்தன. புயலின் போது மழையின் காரணமாக பல இடங்களில் கார் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்தது.
புயல் கரையைக் கடக்கும் போது கனமழையும் கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

#USA pic.twitter.com/c6qi4IHupr
— S.ManiSingh (@s_manisingh) October 10, 2024
சூறாவளிக் காற்றும் வீசும் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் சாலைகளில் உள்ள மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்து விழும் அளவிற்கு 150 முதல் 190 கிமீ வேகத்தில் காற்று வீசப்படுகிறது. மழையோடு சூறாவளி காற்றும் வீசியது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications