கண்ணு ஏன் பிங்க் கலர்ல இருந்துச்சு... கமலாவோடு டிபேட் செய்த பென்ஸுக்கு கொரோனாவா?
வாஷிங்டன்: துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸுடன், நேரடி விவாதத்தில் பங்கேற்ற துணை அதிபர் மைக் பென்ஸின் கண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்ததற்கான காரணம் குறித்து விவாதங்கள் கிளம்பியுள்ளன.
இதுபோல இளஞ்சிவப்பு நிறத்தில் கண்கள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். ஆனால் விவாதத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் பென்ஸுக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருந்தது.

இருப்பினும் விவாதத்தின்போது பென்ஸ் இளஞ்சிவப்பு கண்களுடன் காணப்பட்டது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதுபோல கண்கள் மாறுவது மிகவும் அரிதானது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களில் 3 சதவீதம் பேருக்கு இது போல கண்கள் நிறம் மாறியிருந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
conjunctivitis அதாவது இளஞ்சிவப்பு கண்கள் என்பது, கண்களில் ஏதேனும் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று பாதித்தால் இதுபோல ஏற்படும். இது எப்படி வருகிறது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவரின் கண்களை ஆராயாமல் எதனால் அது ஏற்பட்டது என்று யூகமாக சொல்ல முடியாது. பென்ஸின் கண்கள் ஏன் இளஞ்சிவப்பில் இருந்தன என்று தெரியவில்லை.
கண் பாதிப்புக்குள்ளானோருக்கு கொரோனா வரும் என்று டாக்டர்கள் சொல்லவில்லை. ஆனால் கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் 3 சதவீதம் பேருக்கு இந்த கண்கள் நிறம் மாறுதல் இருந்தது என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால்தான் பென்ஸுக்கும் ஒரு வேளை கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தை பலர் கிளப்பியுள்ளனர்.
பென்ஸ், கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே நடந்த விவாதத்தின்போது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருவரும் தனித் தனியாக பிரிக்கப்பட்ட பகுதிகளில்தான் அமர்ந்திருந்தனர். இருவரும் கொரோனா டெஸ்ட் எடுத்த பின்னரே விவாதத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொரோனா தொற்று தாக்குவதை தடுக்க போதுமானதாக இல்லை என்று சில மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போது அமரிக்காவில் பென்ஸ் கண்கள் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. பென்ஸ்தான் இதற்கு விளக்கம் தர வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications