ஹாலிவுட் படமே தோற்றுவிடும்! பரபரப்பான 4 வழிச்சாலையில் தரையிறங்கிய விமானம்.. இணையத்தில் பரவும் வீடியோ
வாஷிங்டன்: விமானம் ஒன்று தொழில் நுட்ப கோளாறு காரணமாக பரபரப்பான நான்கு வழிச்சாலையில் தரையிரங்கி எந்த வாகனத்திலும் இடிக்காமல் செல்லும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
விமானங்களில் என்ஜின் கோளாறு ஏற்படும் போது அவசரமாக விமானங்கள் தரையிறங்குவது வாடிக்கையான ஒன்றுதான். அருகில் உள்ள விமான நிலையங்களை தொடர்பு கொண்டோ விமானங்கள் தரையிறங்கும். சில நேரங்களில் சரிவர பராமரிப்பு இன்றி இருக்கும் விமான நிலையங்களில் கூட விமானங்கள் அவசர காலங்களில் தரையிறங்க வேண்டியிருக்கும். இதில் பெரிதாக வியப்பதற்கு எதுவும் இல்லை.

ஆனால் வாகனங்கள் எந்நேரமும் பரபரப்பாக இயங்கும் சாலைகளில், அதுவும் பரபரப்பான 4 வழிச்சாலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி விமானம் ஒன்று தரையிறங்கி எந்த வாகனத்திலும் இடிக்காமல் சென்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் இணையத்தில் மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. அதுபற்றிய விவரத்தை பார்க்கலாம். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்றில் வின்செண்ட் பிரேசர் என்ற விமானி தனது மாமனாருடன் சென்று கொண்டிருந்தார். விமானம் அங்குள்ள மலைப்பகுதிக்கு மேலே சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.
அவசரமாக விமானத்தை தரையிறக்குவதற்கு அருகில் விமான நிலையங்கள் எதுவும் இல்லை. எப்படியும் தனது மாமனாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே பைலட் பிரேசருக்கு இருந்தது. இதனால், அருகில் ஒரு ஆற்றில் தரையிறக்கிவிடலாமா என்று நினைத்துள்ளார். அப்போது அவருக்கு இடதுபக்கமாக 4 வழிச்சாலை ஒன்று தென்பட்டது. உடனே சற்றும் யோசிக்காமல் விமானத்தை அதில் தரையிறக்கினார்.

வாகனங்கள் எதிர்திசையில் பரபரப்பாக வந்து கொண்டிருந்தாலும் விமானி விமானத்தை தரையிறக்கினார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரேசர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் விமானம் சாலையில் சீறிபாய்ந்து கொண்டிருக்கும் போது எதிரே கார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஏதோ ஹாலிவுட் படத்தில் பார்க்கும் காட்சிகளை போல இந்த வீடியோ பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் விமானியின் சாதுர்யமான செயலை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக விமானி கூறுகையில், இது போல பல தருணங்களில் விமானங்கள் அவசரமாக தரையிறங்கியுள்ளது. ஆனால் துயரத்தில் முடிந்து இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இதில் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications