அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்! பிரதமர் மோடி வாழ்த்து
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றார். இந்நிலையில் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த பதவியேற்பு விழா நிகழ்வுகள் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் நடைபெற்றது. அதிபர் பதவியேற்கும் இந்த நிகழ்ச்சியில் பாரம்பரியமாக துணை அதிபர் பதவியேற்பு, அதிபரின் உரை, மதிய உணவு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. வாஷிங்டனில் நடந்த பதவியேற்பு விழாவில் ஜனநாயகக் கட்சி தலைவர்கள், குடியரசுக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

அதேபோல் தொழிலதிபரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் பங்கேற்றார். இந்த பதவியேற்பு விழா வெள்ளை மாளிகையில் தேநீர் விருந்துடன் தொடங்கியது. முன்னாள் அதிபரான ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி ஜில் பைடன் இருவருக்கும் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா டிரம்ப் விருந்தளித்தார்கள். இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் தொடங்கின.
கடந்த 2017ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற போது பிரபல இசை கலைஞரான அண்டர்வுட் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இம்முறையும் அவரே இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். டிரம்பை தொடர்ந்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற டிரம்ப் தொடக்க உரையை ஆற்றியுள்ளார். இந்த உரையில் அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்க அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றன.
டிரம்ப் மற்றும் வான்ஸ் பதவியேற்பை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின், டொனால்ட் டிரம்ப் தனது முதல் நாளில் கொண்டு வரும் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளர். இதனைத் தொடர்ந்து மதிய விருந்து நடைபெற்றது. இறுதியாக அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.
புதியதாக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது நெருக்கமான நண்பருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற காத்துக்கொண்டிருக்கிறேன் என்று மோடி வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். அதேபோல ரஷ்ய அதிபர் புதினும் வாழ்த்துகளை பகிர்ந்திருக்கிறார்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications