குவாட் உச்சி மாநாடு: ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
வாஷிங்டன்: குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுஹா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. சர்வதேச அரங்கில் சீனாவுக்கு எதிரான யுக்தியாக இந்த குவாட் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இதன் உச்சி மாநாடு இன்று நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அமெரிக்காவின் 5 முன்னணி நிறுவனங்களின் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவில் அந்நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

முன்னதாக பிரதமர் மோடி, கமலா ஹாரிஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் கொரோனா 2-வது அலையின் போது இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி செய்ததற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருந்தார். மேலும் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு கமலா ஹாரிஸ் பாராட்டு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதாரம் மற்றும் ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது பற்றி இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், குவாட் உச்சி மாநாடு, இந்தோ - பசிபிக் பிராந்திய உறவுகள், ஆப்கானிஸ்தான் விவகாரம் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹாவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி, டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications