உலகின் பிரபலமான தலைவர் பிரதமர் மோடி.. எல்லா பக்கமும் அமோக ஆதரவு.. எதிர்ப்பே இல்லையாம்.! புது சர்வே
வாஷிங்டன்: அமெரிக்காவின் 'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான தலைவர்கள் லிஸ்டில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' தொடர்ச்சியாக உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. உலகின் பல நாடுகளில் ஆய்வுகளை நடத்தி இந்த பட்டியலை அவர்கள் ரிலீஸ் செய்வார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த தலைவர்களுக்கு ஆதரவும் செல்வாக்கும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய இது உதவும். அதன்படி சமீபத்திய லிஸ்டை மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி: அதன்படி இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடி 76 சதவீத ஆதரவுடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக இருக்கிறார். பல காலமாகவே இந்த லிஸ்டில் பிரதமர் மோடி ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் அடுத்த இடத்தை பிடித்த தலைவரைக் காட்டிலும் பிரதமர் மோடி சுமார் 10 சதவீத அதிக பாயிண்டுகளை பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
கடந்த நவ. 29ஆம் தேதி முதல் டிச. 5ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த லிஸ்டை உருவாக்கியுள்ளனர். மொத்தம் 22 சர்வதேச தலைவர்கள் குறித்து அவர்கள் இந்த லிஸ்டை ரெடி செய்துள்ளனர். இதில் பிரதமர் மோடிக்கு 76% பேர் ஆதரவு அளித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக 18% பேர் வாக்களித்துள்ளனர். எந்தவொரு கருத்தும் இல்லை என்று 6% பேர் வாக்களித்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த பல காலமாகவே இந்த ரேங்கிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த இடங்கள்: பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் என்பவருக்கு 66% பேர் ஆதரவும் 28% பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 6% பேர் கருத்து இல்லை எனக் கூறியுள்ளனர். அடுத்த இடத்தில் சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் உள்ளார். அவருக்கு ஆதரவாக 58% பேர், எதிராக 285 பேர், கருத்து இல்லை என 14% வாக்களித்துள்ளனர்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (49%), ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (47%) ஆகியோர் டாப் 5 இடங்களில் வந்துள்ளனர். அதேபோல உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்க அதிபர் பைடன் 40% ஆதரவுடன் 8வது இடத்தில் இருக்கிறார். அதேபோல கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் முறையே 13 மற்றும் 17ஆவது இடத்தில் உள்ளனர்.
எதிர்ப்பும் குறைவு: எதிராக வாக்களித்தவர்கள் என்ற லிஸ்டிலும் பிரதமர் மோடிக்குத் தான் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. வெறும் 18% மட்டுமே அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதிகபட்ச எதிர்ப்பு என்று பார்த்தால் அது செக் குடியரசுத் தலைவருக்குத் தான் அதிகம்.. அவருக்கு எதிராக 79% பேர் வாக்களித்துள்ளனர். அடுத்து தென் கொரியா, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளிலும் அந்தந்த நாட்டின் தலைவர்களுக்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications