இப்படியும் நடக்குமா.. பெண்களுக்கே தெரியாமல் ஆபாச பட வீடியோக்கள் அப்லோடு! 1.8 மில்லியன் டாலர் அபராதம்
வாஷிங்டன்: இளம்பெண்களை ஏமாற்றி வலுக்கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட வைத்த வீடியோக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பிரபல ஆபாச இணையதளமான PornHub சிக்கியுள்ளது. இதையடுத்து அந்த இணையதளத்தின் தாய் நிறுவனமான MindiGeekக்கு அதிரடியாக 1.8 மில்லியன் டாலர் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஆபாசப்பட இணையதளமாக PornHub உள்ளது. இதன் தாய் நிறுவனத்தின் பெயர் Aylo என்ற MindGeeK. இந்த நிறுவனம் Youporn உள்பட பிற ஆபாச இணையதளங்களையும் நடத்தி வருகிறது. இந்த MindGeek நிறுவனம் கனாடாவை சேர்ந்த பங்கு சந்தை நிறுவனமான இசிபிவால் சமீபத்தில் வாங்கப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது PornHub இணையதளம் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது பெண்களை கடத்தி கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட வைத்ததாக கூறப்படுகிறது.
அதோடு கேர்ஸ் டூ பார்ன் (ஜிடிபி) எனும் நிறுவனம் பெண்களை கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட வைத்து வீடியோவாக எடுத்தது விற்பனை செய்துள்ளது. இந்த வீடியோவை வாங்கி PornHub நிறுவனம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் அதில் இருக்கும் பெண்களுக்கு தெரியாமலேயே லாபம் சம்பாதிக்கும் வகையில் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இணையதளங்களில் தங்களின் ஆபாச வீடியோக்களை பார்த்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து வீடியோக்களை நீக்க அவர்கள் 2016, 2017 ம் ஆண்டுகளில் கோரிக்கை வைத்தனர். ஆனால் வீடியோ நீக்கப்படவில்லை. இதனால் 400க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுபற்றி அவர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது MindGeek நிறுவனம் லாப நோக்கத்தில் பெண்களின் ஆபாச வீடியோக்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு 1.8 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் ரூ.14,97,10,500) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக பெண்களை கட்டாய உடலுறவுக்கு வலியுறுத்தி வீடியோ எடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டில் ஜிடிபி நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்த ரூபன் ஆண்ட்ரே கார்சியாவிற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications