Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச பட நடிகை வழக்கு.."சிக்க வைத்தால்" நடப்பதே வேறு..மீண்டும் பகிரங்கமாக எச்சரித்த டொனால்டு டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஆபாச பட நடிகைக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் தனக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் மரணமும் அழிவும் ஏற்படக்கூடும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்து தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை அதிபராக இருந்தவர் டொனால்டு டிரம்ப். அதிபர் பதவியில் இருந்த போதே அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார்.

அதன்பிறகு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததும் அந்த தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தனது ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டிவிட்டார்.

டிரம்பின் இளமைக்காலம்

டிரம்பின் இளமைக்காலம்

இதனால், அமெரிக்க வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவராகவே டிரம்ப் கருதப்பட்டார். பெரும் தொழில் அதிபரான டிரம்ப் அதிபர் பதவி வருவதற்கு முன்பாக ஒரு பிளேபாயாகவே வலம் வந்து இருக்கிறார். டிரம்பின் இளைமைக்காலம் முதல் பல்வேறு பெண்களுடன் உறவில் இருந்துள்ளார். மேலும், சில பெண்கள் அவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளையும் வைத்திருந்தனர்.

ஆபாச நடிகை ஸ்டோர்மி

ஆபாச நடிகை ஸ்டோர்மி

இருந்தாலும் தனக்கு பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தாத வண்ணம் இந்த விவகாரதை டிரம்ப் பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் தான், 2016-ல் நடந்த அதிபர் தேர்தலின்போது தன்னுடன் நெருக்கமான உறவில் டிரம்ப் இருந்ததாக பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார். அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த நிலையில் ஆபாச நடிகை வெளியிட்ட இந்த குற்றச்சாட்டு அதிரவைத்தது.

 ஸ்டோர்மி உடன் டிரம்ப் ஒப்பந்தம்

ஸ்டோர்மி உடன் டிரம்ப் ஒப்பந்தம்

ஆபாசப் பட நடிகையுடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் நெருக்கமாக இருந்தார் என்று டிரம்பிற்கு எதிரான தரப்பு அவரை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தனர். தேர்தலுக்கு சில காலம் முன்பு வரை ஸ்டோர்மி டேனியல்ஸ் இது குறித்துத் தொடர்ந்து பேசி வந்தார். எனினும், இந்த குற்றச்சாட்டுக்களை டிரம்ப் மறுத்து இருந்தார். இதற்கிடையில், தன்னைப் பற்றியும் தன்னுடன் இருந்த உறவு குறித்தும் பேசக் கூடாது என்று ஸ்டோர்மி டேனியல்ஸ் உடன் டிரம்ப் ஒரு ஒப்பந்தம் போட்டார்.

டிரம்பிற்கு எதிராகவே வாக்குமூலம்

டிரம்பிற்கு எதிராகவே வாக்குமூலம்

இதற்காக அவர் 1.30 லட்சம் டாலரும் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி) கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தாம் தற்போது டிரம்பிற்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டிரம்ப் இந்த தொகையைச் சட்டவிரோதமாகத் தேர்தல் நிதியில் இருந்து கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. டிரம்பின் வழக்கறிஞராக இருந்த மைக்கேல் கோஹன் இப்போது டிரம்பிற்கு எதிராகவே வாக்குமூலம் அளித்தது சிக்கலுக்கு வித்திட்டது.

தொடர்பில் இருந்தது இல்லை

தொடர்பில் இருந்தது இல்லை

ஆபாசப் பட நடிகைக்குத் தனது நிதியை முதலில் கொடுத்ததாகவும் அதன் பிறகு அதை டிரம்ப் தரப்பு தனக்குத் திருப்பி அளித்துவிட்டதாக மைக்கேல் கோஹன் வாக்குமூலம் அளித்து பரபரப்பை கிளப்பி விட்டு இருந்தார். அதேநேரம் இந்த குற்றச்சாட்டுக்களை எல்லாம் மறுத்து வரும் டொனால்டு டிரம்ப், தான் எந்த காலகட்டத்திலும் டேனியல்ஸுடன் தொடர்பில் இருந்தது இல்லை என்றும் தன்னை கண்டு அஞ்சி ஆளும் தரப்பு இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் சாடினார்.

 பெரும் அழிவு ஏற்படும்

பெரும் அழிவு ஏற்படும்

இந்த நிலையில், ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல் வழக்கில் தனக்கு எதிராக குற்றச்சாட்டினால் பெரும் அழிவு ஏற்படும் என்று டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் மன்ஹட்டன் மாவட்ட அட்டார்னி ஆல்வின் பிராக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப், ஆபாச பட நடிகை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டால் மரணம் மற்றும் பேரழிவு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக எச்சரித்து பதிவிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மிகக் குறைவான நபர்களே

மிகக் குறைவான நபர்களே

முன்னதாக இந்த வார துவக்கத்திலும் டிரம்ப் தான் கைது செய்யப்படுவேன் என்றும் அதற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருந்தார். இருப்பினும், அமெரிக்காவின் பொருளாதார தலைநகராகக் கருதப்படும் நியூயார்க்கில் நடந்த இந்த போராட்டத்தில் மிகக் குறைவான நபர்களே கலந்து கொண்டனர். இதுவும் டிரம்பிற்கு பின்னடைவாகவே இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+