நாளைக்கு இருப்பேன்னு நானே நம்பலை.. லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயில் தப்பிய இந்திய நடிகை! இவங்க தானா?
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பலியானோர் எண்ணிக்கை 25-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை தான் நேரில் பார்த்ததாகவும், நாளை உயிரோடு இருப்பேன் என நானே நம்பவில்லை என கூறியிருக்கிறார் பிரபல நடிகையான ப்ரீத்தி ஜிந்தா.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஏழாம் தேதி ஏற்பட்ட காட்டு தீ இந்த ஆண்டின் மிக மோசமான இயற்கை பேரிடராக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடும் வறட்சி காரணமாக அந்நகரின் பல பகுதிகளில் மரங்கள் செடி கொடிகள் காய்ந்திருந்ததோடு வேகமான காற்றும் வீசியதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு காட்டுத் தீயாக மாறி உள்ளது. கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை எப்படியாவது அணைத்து விட வேண்டுமென அமெரிக்கா போராடி வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ:
காட்டுத்தீயை கட்டுப்படுத்த கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கி இருக்கின்றனர். தற்போது சுமார் 15,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றார். அமெரிக்கா. கனடா. மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 1400 தீயணைப்பு வாகனங்கள். 50 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. அதே நேரத்தில் பலத்த காற்று காரணமாக தீயை அணைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை:
தற்போதைய சூழ்நிலையில் 80 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் காற்றின் தாக்கம் காரணமாக தீயை அணைக்கும் பணி சற்று சுணக்கத்தை சந்தித்துள்ளது. மேலும் வரும் நாட்களிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 கடந்துள்ளது. மேலும் பலரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
பலி எண்ணிக்கை:
இதன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது. தற்போதைய சூழலில் பொதுமக்கள் பலரும் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஈட்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் பாலிசேட்ஸ் பகுதியில் 8 பேரும், ஈட்டன் பகுதியில் 17 பேரும் மாயமானதாக கூறப்படுகிறது. காட்டுத் தீயின் காரணமாக 12 ஆயிரம் கட்டிடங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ள நிலையில் காட்டுத் தீயின் தீவிரம் இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
ப்ரீத்தி ஜிந்தா:
இந்த தீ விபத்தின் காரணமாக நான்கு முதல் ஐந்து லட்சம் கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பேரிடராக இந்த கலிபோர்னியா காட்டுத்தீ அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் இந்திய நடிகை ஒருவரும் தப்பியதாக கூறப்படுகிறது. தமிழ் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவரும் பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தான் காட்டுத்தீயை தான் நேரில் பார்த்ததாக கூறியிருக்கிறார்.
காட்டுத் தீயால் அச்சம்:
லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தபோது காட்டுத்தீப் பரவலை தான் நேரில் பார்த்ததாக கூறியிருக்கிறார் பிரீத்தி ஜிந்தா. அவர் இருந்த பகுதிக்கு மிக அருகில் தான் காட்டுத் தீ மளமளவென பரவியதாகவும் இன்று மட்டுமே தனது வாழ்க்கை அடுத்த நாளை தான் பார்ப்பேனா என தனது மனதுக்குள் அச்சம் தோன்றியதாகவும், தனது நண்பர்களும் அருகில் இருந்த மக்களும் சாம்பல் புகை உள்ளிட்ட அவற்றின் தாக்கம் காரணமாக தப்பி ஓடியதை பார்த்ததாக கூறியுள்ளார். மேலும், குழந்தைகள் பெரியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காற்றும் கூட அமைதி கொள்ளாமல் தீவிரத்தை காட்டியது. இதை பார்த்து நான் மிகவும் மனம் நொறுங்கிப் போனேன். அதே சமயம் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications