"இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுதே".. இந்திய நிருபரின் கேள்வியால் டிரம்ப் செய்ததை பாருங்க
வாஷிங்டன்: ‛‛இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள பல குழுக்கள் குரல் கொடுத்து வருகிறதே?'' என்று பிரதமர் மோடி முன்னிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இந்திய பத்திரிகையாளர் திடீரென்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை கேட்டதும் டொனால்ட் டிரம்ப் கூறிய வார்த்தைகள் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
பிரதமர் மோடி பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நம் நாட்டின் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து நடந்தது.

இந்த சந்திப்பின்போது இருநாடுகள் இடையேயான பொருளாதாரம், வர்த்தகம், ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட வணிகம் சார்ந்த முக்கிய கையெழுத்துகள் செய்யப்பட்டன. மேலும் கடந்த 2008 நவம்பர் 26ம் ஆண்டில் மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தஹாவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும் இந்த சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினர். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இருதலைவர்களும் பதிலளித்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி ஒன்றை கேட்டார்.
அதாவது பத்திரிகையாளர், ‛‛ தஹாவ்வூர் ராணாவை நாடு கடத்தும் உங்களின் முடிவை இந்திய மக்கள் வரவேற்பு தெரிவிப்பார்கள். அதேவேளையில் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பல்வேறு குழுவினர் பிரிவினைவாதம், பயங்கரவாதம் என்று இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அமெரிக்காவில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று நினைக்கிறீர்களா?'' என்று கேள்வி கேட்டார்.

இதை கேட்ட டொனால்ட் டிரம்ப் அவரது கேள்விக்கு பதிலளிக்கவில்லை. மாறாக அவர், ‛‛அவர் (பத்திரிகையாளர்) கூறிய வார்த்தைகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது Accent பிரச்சனை. அவரது உச்சரிப்பை புரிந்து கொள்ள எனக்கு சற்று கடினமாக உள்ளது'' எனக்கூறி கடந்து சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது டொனால்ட் டிரம்ப் இப்படி பத்திரிகையாளர்களிடம் நடந்து கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு கடந்த பிப்ரவரி 4 ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் டொனால்ட் டிரம்ப்பிடம் ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் செயல்பாடு மற்றும் அதில் அமெரிக்கா தலையீடுமா? என்பது பற்றி ஆங்கிலத்தில் கேள்வியை கேட்டார்.
அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛‛உங்களின் கேள்வியை என்னால் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. உங்களின் வாய்ஸ் நன்றாக உள்ளது. உச்சரிப்பும் சரியாக இருக்கிறது. ஆனாலும் என்னால் கேள்வியை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் ஒன்றை சொல்கிறேன். குட்லக்.. அமைதியாக வாழுங்கள்'' என்று கூறி நழுவினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications