அடிதூள்! தேசிய விளையாட்டு விருதுகள்! சரத் கமலுக்கு கேல் ரத்னா.. பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விளையாட்டுப் போட்டிகளில் தலைசிறந்து விளங்கும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்குத் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிகளில் தலைசிறந்து விளங்கும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு விருதுகளை அறிவித்து வருகிறது.

அதன்படி இந்தாண்டில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்குக் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்க உள்ளார்.

தமிழக வீரர்கள்

தமிழக வீரர்கள்

டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியாவுக்காக பகத்தக்கை பெற்றுள்ளார். மேலும், செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அர்ஜுனா விருத

அர்ஜுனா விருத

தடகளத்தில் சீமா பூனியா, பேட்மின்டனில் லக்‌ஷயா சென், பினாய் ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. ஜிவன்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி கமர் (குத்துச்சண்டை), சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா ஷூட்டிங்) மற்றும் சுஜீத் மான் (மல்யுத்தம்) ஆகியோருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படுகிறது. தினேஷ் ஜவஹர் லாட் (கிரிக்கெட்), பிமல் பிரபுல்லா கோஷ் (கால்பந்து) மற்றும் ராஜ் சிங் (குத்துச்சண்டை) ஆகியோருக்கு வாழ்நாள் பிரிவில் விருதுகள் வழங்கப்படுகிறது.

தியான் சந்த் விருது

தியான் சந்த் விருது

அதேபோல அஸ்வினி (தடகளம்), தரம்வீர் சிங் (ஹாக்கி), பி சி சுரேஷ் (கபடி) மற்றும் நிர் பகதூர் குருங் (பாரா விளையாட்டு) ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தியான் சந்த் விருது வழங்கப்படுகிறது. அர்ஜுனா விருதைப் பொறுத்தவரை மொத்தம் 25 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர்

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வரும் 30ஆம் தேதி குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறார். டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள வீரர் வீராங்கனைகளுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+