Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு.. வெளியான ரகசிய ஆவணம்..கடும் கோபத்தில் பைடன்.. அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை டிரம்ப்பிற்கு சாதகமாக மாற்ற ரஷ்ய அதிபர் புடின் முயன்றதாக அமெரிக்க உளவு துறை ரகசிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் டிரம்ப்பை ஜனநாயகக் கட்சியின் பைடன் தோற்கடித்தார். 25 ஆண்டுகளுக்குப் பின் தேர்தலில் தோற்ற முதல் அதிபர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்தார்.

இந்த அதிபர் தேர்தலில் முடிவுகளை மாற்ற வெளிநாடுகள் முயன்றதாக அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் இது குறித்த முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு துறை தற்போது வெளியிட்டுள்ளது.

புதின் தலையீடு

புதின் தலையீடு

இதில் அதிபர் தேர்தல் முடிவுகளை டிரம்ப்பிற்கு சாதகமாக மாற்ற ரஷ்யா முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டிரம்பின் பிரசார குழுவிலிருந்த முக்கிய பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு ரஷ்யா அதிகாரிகள் உதவியதாகவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ரஷ்ய அதிபர் விளாதிமர் புடினின் மேற்பார்வையில் நடந்திருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் அவரின் ஒப்புதலுடன் இது நடந்திருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய ஆடியோ

முக்கிய ஆடியோ

அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது பைடனின் மகன் ஹண்டர் பைடன் குறித்த குற்றச்சாட்டுகள் சில எழுந்தன. ஹண்டர் பைடன் முறைகேடாக உக்ரைன் நாட்டில் முதலீடு செய்ததாக அப்போது டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். இந்த விசாரணையிலிருந்த ஹண்டர் பைடனை பாதுகாக்க முக்கிய அதிகாரிகளுடன் பைடன் பேசிதாகக் கூறப்படும் நான்கு ஆடியோக்களையும் டிரம்ப் பிரசார குழு உறுப்பினரிடம் ஆண்ட்ரி டெர்காச் என்ற உக்ரைன் நாட்டு எம்பி அளித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 அதிபர் தேர்தல்

2016 அதிபர் தேர்தல்

முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் ரஷ்யா தலையீடுகள் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோற்கடிக்க டிரம்பிற்கு ரஷ்யா உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதை அமெரிக்க உளவு அமைப்புகளும் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனா தலையீடு?

சீனா தலையீடு?

இதேபோல பைடனுக்கு ஆதரவாகத் தேர்தலை மாற்றச் சீனா முயன்றதாகவும் டிரம்ப் தரப்பு குற்றஞ்சாட்டி இருந்தது. இது குறித்தும் தற்போது வெளியான ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் சீனா நல்ல ஒரு உறவைக் கொண்டிருக்க விரும்பியதாகவும் இருப்பினும் தேர்தலில் பைடன், டிரம்ப் என இருவரில் யார் வெற்றி பெற்றாலும் பெரியளவு பலன் கிடைக்காது என்பதால் சீனா அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மற்ற நாடுகள்

மற்ற நாடுகள்

இதேபோல கியூபா, வெனிசுலா மற்றும் லெபனான் பயங்கரவாத குழுக்களும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட முயன்றதாக அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளைப் போல இவை வலிமையான நாடுகளாக இல்லை என்பதால் இத்தேர்தலில் பெரியளவு அந்த நாடுகளால் ஏற்படுத்த முடியவில்லை. அதேநேரம் டிரம்பிற்கு எதிராக ஈரான் பிரசாரம் செய்ய முயன்றதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடை

பொருளாதாரத் தடை

மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது உறுதியாகியுள்ளதால் விரைவில், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பிறகு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+