பிரான்ஸ் அதிபர் காதில் டிரம்ப் சீக்ரெட்டாக சொன்ன வார்த்தை.. "புதின் போடும் டீல்.." ஆஹா ரூட்டே மாறுதே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளை அழைத்து டிரம்ப் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனிடம் டிரம்ப் தனிப்பட்ட முறையில் சொன்ன சில தகவல்கள் அங்கிருந்த மைக்கில் ரெக்கார்ட் ஆகிவிட்டது. டிரம்பின் இந்தப் பேச்சு ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ரஷ்யா உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தரப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காகத் தான் கடந்த வாரம் அவர் ரஷ்ய அதிபர் புதினை அலாஸ்காவில் வைத்து நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளை அழைத்து நேற்றைய தினம் டிரம்ப் பேசியிருந்தார்.

Putin Wants to Make Ukraine Deal Trump s Hot Mic Moment at White House Summit

சீக்ரெட் ஆலோசனை

இந்த மீட்டிங்கில் நடந்த சில விஷயங்கள் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனக்காகவே ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரகசியமாகத் தெரிவித்தார். ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்பிற்குச் சற்று முன்பு டிரம்ப் இதைத் தெரிவித்தார்.

டிரம்ப் வெளிப்படையாகச் செய்தியாளர்களிடம் இதைச் சொல்லவில்லை. மாறாக மீட்டிங்கிற்கு முன்பு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனிடம் இந்தத் தகவலை அவர் ரகசியமாகப் பகிர்ந்து கொண்டார். இருப்பினும், அப்போது டிரம்ப்பிடம் இருந்த மைக் இந்த பேச்சை ரெக்கார்ட் செய்துவிட்டது.

டிரம்ப் சொன்ன வார்த்தை

இது குறித்து டிரம்ப் கூறுகையில், "அவர் (புதின்) ஒரு ஒப்பந்தம் போட விரும்புகிறார். எனக்காகவே அவர் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.! " என்று டிரம்ப் மக்ரோனிடம் ரகசியமாகத் தெரிவித்தார். வாஷிங்டனில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு முன்னதாக டிரம்ப் இதைக் கூறினார்..

இந்தச் சந்திப்பில் அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் அமைதி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து விவாதித்தனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு பேச்சுவார்த்தைகளில் நேரடியாகப் பங்கேற்கத் தான் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். அவர் மேலும் செய்தியாளர்களிடம் அவர், "அனைவரும் விரும்பினால், நான் அந்தச் சந்திப்பிற்கு (உக்ரைன்- ரஷ்யா இடையேயான சந்திப்பு) செல்வேன்" என்றார்.

பாதுகாப்பு உத்தரவாதம்

ரஷ்யா உடன் அமைதி ஒப்பந்தம் போடும்போது உக்ரைன் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கும் என்று ஜெலென்ஸ்கியிடம் டிரம்ப் உறுதி அளித்தார். இருப்பினும், அமெரிக்கா என்ன மாதிரியான பாதுகாப்பை வழங்கும் என்பது குறித்த விவரங்களை டிரம்ப் பகிர்ந்து கொள்ளவில்லை.

அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையில் ஜெலென்ஸ்கி மற்றும் பல ஐரோப்பிய நட்பு நாடுகளின் தலைவர்களை டிரம்ப் சந்தித்தார். அப்போது தான் டிரம்ப் இந்தக் கருத்துகளைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "பாதுகாப்பைப் பொறுத்தவரை, நிறைய உதவிகள் உக்ரைனுக்கு இருக்கும்.. ஐரோப்பிய நாடுகள் தான் உக்ரைனுக்கு அதிகம் உதவும். ஏனென்றால் அவர்கள் தான் அருகே இருக்கிறார்கள். அதேநேரம் நாங்களும் தேவையான உதவிகளைச் செய்வோம்" என்றார்.

முக்கியம்

இந்த உறுதிமொழியை ஒரு மிக முக்கியமான திருப்பம் ஜெலன்ஸ்கி வரவேற்றார். பாதுகாப்பு உத்தரவாதங்கள் அடுத்த ஒரு வாரத்திலிருந்து 10 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக முறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், சுமார் 90 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ஆயுதங்களை வாங்க உக்ரைன் முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+