சீனாவுக்கு செக்.. இந்தியாவை முக்கிய கூட்டாளியாக வைத்து அமெரிக்கா போட்ட பெரிய பிளான்!
வாஷிங்டன்: பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படும் அரிய வகை கனிமங்களின் சப்ளையை சீனா கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையே கனிமங்கள் சப்ளை குறித்து ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சேர்ந்த அமைப்பு குவாட் என்று சொல்லப்படுகிறது. இந்த குவாட் அமைப்பின் பிரதிநிதிகளின் கூட்டம் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், குவாட் நாடுகளுக்கு இடையே கனிம வளங்களை பகிர்ந்துக்கொள்ளுதல் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அதிலிருந்து பெறப்படும் பொருட்களின் உற்பத்திக்கு ஏதாவது ஒரு நாட்டை மட்டும் நம்பியிருப்பது, பொருளாதார ரீதியான நிர்பந்தம், விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிக்க வழிவகுக்கும். எனவே இந்த பிரச்சனையை சரி செய்ய குவாட் அமைப்புகளுக்கு இடையில் ஒத்துழைப்பு அவசியம்" என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
'Quad Critical Minerals Initiative' என்கிற பெயரில் வெளியான இந்த கூட்டறிக்கையின் முக்கிய நோக்கம், கனிம விநியோகச் சங்கிலியைப் பாதுகாத்து, அதை பன்முகப்படுத்துவது ஆகும். மேலும் சீனாவின் ஆதிக்கத்தை தகர்ப்பதும் இந்த கூட்டு நாடுகளின் முயற்சியின் நோக்கமாகும். சீனா தனது கட்டுப்பாடுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்றும் இந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
குவாட் அமைப்பு இப்படியான முடிவுக்கு வர சீனாவின் சப்ளை நிறுத்தம்தான் காரணம். ஆட்டோமொபைல் தொடங்கி ராணுவ தளவாடங்கள் உற்பத்தி வரை அரிய கனிமங்களின் தேவை இருக்கிறது. ஆனால் சீனா இந்த சப்ளையை நிறுத்தியதால் இந்தியா, அமெரிக்கா தொடங்கி உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் துறை கடுமையாக அடிவாங்கியிருக்கிறது. எனவேதான் குவாட் அமைப்பு இந்த முடிவை எடுத்திருக்கிறது.
அதேபோல தைவான் பிரச்சனை குறித்தும் இந்த அமைப்பு தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டிருக்கிறது. இதில் நேரடியாக சீனாவின் பெயரை குறிப்பிடாமல், "தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத செயல்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. இது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று இந்த அமைப்பு கூறியிருக்கிறது.
இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. "இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து சரியான முடிவுகளை எடுப்பதற்கு சுதந்திரமான தேர்வு அவசியமாக இருக்கிறது" என்று ஜெய்சங்கர் பேசியிருந்தார்.
ஜெய்ஷங்கரின் வலியுறுத்தலின் பேரில், காஷ்மீரில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை குவாட் நாடுகள் கண்டித்தன. மேலும், இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள், அதற்கு உதவியவர்கள் மற்றும் நிதியளித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தாமதமின்றி நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தின.
பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் இந்தியா தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த விவகாரத்தில் மூன்றாவது நாடுகள் தலையிட கூடாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் தற்போது குவாட் அமைப்பகள் கண்டனம் தெரிவித்திருப்பதன் மூலம் இதில் மூன்றாவது நாடுகள் தலையீடு ஏற்பட்டிருக்கிறது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications