கிண்டலடித்த ரசிகர்கள்.. உள்ளாடையை ஏலமிட்ட பெண் பாடகி.. 30 நிமிடத்தில் ட்விஸ்ட்! யாருமே எதிர்பார்க்கல
அமெரிக்கா ராப் பாடகி அலிசா ஒரே மாதிரியான உள்ளாடைகளை அணிந்ததாக ரசிகர்கள் கிண்டலடித்த நிலையில் 2 உள்ளாடைகளை ஏலமிட்டார். இது 30 நிமிடத்தில் ரூ.87 லட்சத்துக்கு ஏலம் போனது.
வாஷிங்டன்: அமெரிக்கவின் பிரபல ராப் பாடகியான 24 வயது நிரம்பிய அலிசா மைக்கேல் ஸ்டீபன் தான் அணிந்திருந்த 2 உள்ளாடைகளை ஆன்லைனில் ஏலம் விடுவதாக அறிவித்ததோடு ஏல பட்டியலில் இணைத்தார். அடுத்த 24 மணிநேரத்தில் ரூ.87 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில் ட்விஸ்ட் ஏற்பட்டது.
பெரிய பெரிய பிரபலங்கள் பயன்படுத்தும் பொருட்கள் ஏலம் விடும் செயல் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த பொருட்கள் பல லட்சம், ஏன் கோடிக்கணக்கான ரூபாய்க்கு கூட தனிநபர்கள் அல்லது பெரிய நிறுவனங்கள் ஏலம் எடுக்கும்.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் பிரபல ராப் பாடகியான 24 வயது நிரம்பிய அலிசா மைக்கேல் தனது உள்ளாடையை ஏலம் விட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

ராப் பாடகி
அமெரிக்காவை சேர்ந்தவர் அலிசா மைக்கேல் ஸ்டீபன். வயது 24. இவர் ராப் பாடகியாக உள்ளார். இவருக்கு அமெரிக்காவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரை லட்டோ என பலரும் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் சமீபத்தில் அவரது சிறுத்தை புள்ளி உள்ளாடை தொடர்பான படங்கள் வெளியாகி இருந்தன.

ரசிகர்கள் கருத்து
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரே மாதிரியான உள்ளாடைகளை அவர் அணிந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். மேலும் தொடர்ந்து ஒரே உள்ளாடையை அவர் அணிவதாக கருத்து தெரிவித்து இருந்தனர். இது இணையதளத்தில் விவாதத்தை கிளப்பியது. இதனை பார்த்த அலிசா, தன்னிடம் இதுபோன்ற உள்ளாடைகள் நிறைய இருப்பதாக கூறி அதற்கான படங்களை வெளியிட்டார்.

விற்பனை செய்ய முயற்சி
மேலும் அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில், நான் அணிந்திருந்த சிறுத்தை புள்ளி உள்ளாடையை ஏலம் விடுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். ‛‛நான் பயன்படுத்திய சிறுத்தை புள்ளி உள்ளாடையை விற்பனை செய்ய உள்ளேன். இதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து புது உள்ளாடைகள் வாங்க உள்ளேன்'' என்றார்.

ரூ.75 லட்சத்துக்கு ஏலம்
இதையடுத்து இபே விற்பனை தளத்தில் அவர் பயன்படுத்திய 2 உள்ளாடைகளை பட்டியலிட்டார். அரைமணி நேரத்தில் 90 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர் வரை ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு ரூ.87 லட்சம் என கூறப்படுகிறது. இருப்பினும் உடனடியாக அந்த ஏலத்தை இபே நிறுவனம் நிறுத்தியது. அதோடு அந்த உள்ளாடை ஏலத்தை நீக்கம் செய்தது. பயன்படுத்திய துணியை விற்க அனுமதியில்லை என்ற நிலையில் நீக்கம் செய்யப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications