ஈரானுடன் போர் வேண்டாம்.. நெதன்யாகுவிற்கு அழுத்தத்திற்கு பணியாத டிரம்ப்.. பிளான் இதுதான்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரானை சும்மா விடக்கூடாது. ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு தினமும் போன் போட்டு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஆனால் அந்த அழுத்தத்திற்கு டிரம்ப் செவிசாய்க்கவில்லை என்றும், டிரம்ப் வேறு பிளான் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக 'தி ஃபைனான்சியல் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிகையில் வெள்ளை மாளிகையை சேர்ந்த ஒரு அதிகாரி கூறியதாக சொல்லப்பட்டுள்ள தகவல் வருமாறு:

Renew Iran Strikes

''இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தினமும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஈரான் மீது மீண்டும் போரை தொடங்கும்படி வலியுறுத்துகிறார். இந்த போரை தடுக்க வெள்ளை மாளிகையில் ஒரு தரப்பினர் விரும்புகின்றனர். இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் டொனால்ட் டிரம்பும் ஈரான் மீதான புதிய தாக்குதல்கள் நடத்துவதை விட பொருளாதார ரீதியாக ஈரானை முடக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். இதனை பெஞ்சமின் நெதன்யாகுவிடம் உறுதியாக கூறிவிட்டார். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்றும் உள்ளது.

அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தலைவர்கள் டிரம்பிடம் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம். பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனை டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார்'' என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதலை தணித்து ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி அவர் மீண்டும் ஈரானுடன் போர் வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளும் போரை தவிர்க்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில், '' கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், குவைத் மற்றும் பிற நாடுகள் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அதாவது, வரலாற்றிலேயே மிகப்பெரிய கடற்படை முற்றுகை மற்றும் புதிய 'ஆபரேஷன் அயர்ன் கேட்' நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று அவை விரும்புகின்றன. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாதகமான சூழல் உருவாகி வருகிறது. அதே சமயம், அமெரிக்காவின் நலன்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்'' என கூறினார்.

ஆனால் இஸ்ரேல் விவகாரம் பற்றி நன்கு அறிந்த ஒருவர் கூறுகையில், '' ஈரான் மீது மீண்டும் போர் தொடங்க வேண்டும் என்று பெஞ்சமின் நெதன்யாகு விரும்புகிறார். ஆனால் இதுதொடர்பாக டிரம்ப்பிடம் வலியுறுத்தவில்லை'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+