'மாஸ்டர் பிளான்..' பெயரை மாற்றும் ஃபேஸ்புக்.. மெடாவெர்ஸ் திட்டத்தின் தொடக்கப்புள்ளி.. ஏன் முக்கியம்
வாஷிங்டன்: ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
சர்வதேச அளவில் மிகப் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்று ஃபேஸ்புக். ஃபேஸ்புக்தளத்தில் மொத்தம் 2.89 பில்லியன் ஆக்டிவ் பயனாளிகள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் மட்டும் சுமார் 34 கோடி பேர் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளனர்.
ஆன்லைன் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஃபேஸ்புக் நிறுவனம், ஆன்லைன் விற்பனை மற்றும் செய்திகள் ஆகிய பிரிவுகளுக்கு புதிய பிரிவுகளைத் தொடங்கி வருகிறது.

பெயரை மாற்றும் ஃபேஸ்புக்
இந்தச் சூழலில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் the Verge செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை ஃபேஸ்புக் ஆண்டு மாநாட்டில் அறிவிக்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சில காரணங்களால் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு முன்கூட்டியே வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் அழுத்தம்
இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவிக்க ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்துவிட்டது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆண்டு மாநாடு வரும் அக். 28ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு சில நாட்கள் முன்னால் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசு ஃபேஸ்புக் மீதான தனது கெடுபிடிகளை அதிகரித்துள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி என இரு கட்சியைச் சேர்ந்த எம்பிகளும் தற்போது ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்
இப்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் ஃபேஸ்புக்(சமூக வலைத்தளம்), இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளங்களைத் தாண்டி மெய்நிகர் தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் இந்த பெயரை மாற்ற முயற்சியில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

மிக பெரிய திட்டம்
ஃபேஸ்புக் நிறுவனம் மெடாவெர்ஸ் (metaverse) என்ற மெய்நிகர் உலகைப் படைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. விஸ்வல் ரியாலிட்டி (VR) மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி (AR) ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த மெடாவெர்ஸ் என்பது ஒரு இணைய உலகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்ட டெக் கருவிகளைப் பயன்படுத்தி இந்த மெடாவெர்ஸில் ஒருவரிடம் இருந்து மற்றொருவரால் தொடர்பு கொள்ள முடியும் இதற்காக மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் மூன்று பில்லியின் பல மில்லியன் டாலர்களைச் செலவழித்து வருகிறது

சகஜம் தான்
பொதுவாக டெக் நிறுவனங்களுக்கு வேகமாக வளர்ச்சி என்பதே பிரதான இலக்கு. உலகம் முழுவதும் டெக் நிறுவனங்களால் வளர முடியும் என்பதால் அதை நோக்கியே டெக் நிறுவனங்கள் செயல்பட்டு வரும், இதனால் உலகெங்கும் தங்களுக்கு ரீச் கொடுக்கும் வகையில் டெக் நிறுவனங்கள் தங்கள் பெயர்களை மாற்றுவது வழக்கமான ஒரு நடவடிக்கை தான். முன்னதாக கடந்த 2016இல் கூகுள் நிறுவனம் தனது சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில் ஆல்பபெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications