அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயிக்க போறது யார் தெரியுமா? துல்லியமாக கணிக்கும் டாப் நிபுணர் சொன்ன தகவல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடக்கிறது. இதில், டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டில் நிலவும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? என்பது பற்றி பொருளாதார நிகழ்வுகளை துல்லியமாக கணிக்க கூடியவர் என பெயர் பெற்றவரான கிறிஸ்டோபே பராட், கணித்துள்ளார்.
உலகின் வலிமை மிக்க நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது உலகம் முழுவதும் உற்று நோக்கப்படும் ஒன்றாக உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமேயாகும். இதனால், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தற்போதைய அதிபருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
கடும் போட்டி?: வரும் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தற்போதே வாக்களிக்க துவங்கிவிட்டனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிபார்ப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்கணிப்புகளிலும் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவும் என சொல்கின்றன.
யாருக்கு வெற்றி?: டிரம்ப் கை சற்று ஓங்கியிருந்தாலும் பல மாகாணங்களில் மிகக் கடுமையான போட்டி நிலவும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி பொருளாதார நிகழ்வுகளை துல்லியமாக கணிக்க கூடியவர் என பெயர் பெற்றவரான கிறிஸ்டோபே பராட் கணித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப்: குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என்று இவர் கணித்து இருகிறார். நிதி சந்தைகளில் ஏற்படும் குறியீடுகள் உள்பட பல்வெறு மெட்ரிக்ஸ் அளவீடுகளின் படி இவர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். டிரம்ப் தலைமையிலான குடியரசுக்கட்சி கிளீன் ஸ்வீப் ஆக வெல்லும் என்பது இவரது கணிப்பாக உள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:-
கிளீன் ஸ்வீப்: பெட்டிங் மார்க்கெட், கருத்துக்கணிப்புகள், ஃபைனான்சியல் மார்க்கெட்டுகள் என பல்வேறு கணக்கீடுகளை வைத்து ஆய்வு செய்து பார்த்ததில், தற்போதைய சூழலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.
மொனோக்கா நாட்டில் மார்க்கெட் செக்யூரிட்டிசில் முக்கிய கொள்கைகளை வகுப்பவரும் தலைமை பொருளாதார நிபுணராகவும், பராட் உள்ளார். ப்ளூம்பெர்க் பொருளாதார கணிப்பு ரேங்க் தரவரிசையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் இடத்தில் பராட் உள்ளார். பொருளாதாரம் பற்றிய அவரது கணிப்புகள் துல்லியமாக இருப்பதால், அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கணிப்பும் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
-
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
வாட்சை தொலைத்த மேக்ரான்! டிரம்புக்கு கிடைத்த டுகாட்டி பைக்! G7 மாநாட்டில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications