பூமி மட்டுமில்லை.. சூரிய குடும்பமே அழியுமாம்! நம்மை நோக்கி வந்த "முரட்டு" ஸ்டார்! கடைசியில் ட்விஸ்ட்
வாஷிங்டன்: நமது பிரபஞ்சத்தில் தொலை தூரத்தில் இருக்கும் WD 0810-353 என்ற வைட் ட்வர்ப் ஸ்டார் நமது சூரியக் குடும்பத்தையே அழித்துவிடும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்த நிலையில், இது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மிகப் பெரிய பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கிறதா.. இல்லை மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கிறதா என்பதே இங்கே பலருக்கும் எழும் கேள்வியாகும். இதற்கான விடையைக் கண்டறிய வானியலாளர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள் என்றே சொல்லலாம்.

அதேபோல விண்வெளியில் கிரகங்கள், சிறுகோள்கள் சுற்றி வரும் நிலையில், அவை பூமியின் மீது மோதும் ஆபத்துகளும் இருக்கவே செய்கிறது. எனவே, அது குறித்தும் தொலை தூரக் கோள்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் கூட தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை: அப்படி தொலைதூரத்தில் இருக்கும் சோலார் சிஸ்டம் குறித்து ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே WD 0810-353 என்ற வைட் ட்வர்ப் ஸ்டாரை ஆய்வாளர்களை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தனர். இந்த WD 0810-353 ஸ்டாரை ஆய்வாளர்கள் 'Rogue' star, அதாவது முரட்டு நட்சத்திரம் எனக் குறிப்பிட்டனர்.
பொதுவாக வைட் ட்வர்ப் ஸ்டார் என்பது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரம் தனது அணு எரிபொருளை எரித்த பிறகு, அதாவது அதன் ஆயுட்காலம் முடிந்த பிறகு உருவாகும் ஒரு சிறிய நட்சத்திரத்தின் மீதமாகும். இவை மிகவும் அடர்த்தியானதாக இருக்கும்.
அபாயம்: இந்த WD 0810-353 நமது சோலார் சிஸ்டத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இவை சூரியன் மீது மோதும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர். சுமார் 29 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டவர்ப் ஸ்டார் சூரியனில் மோதும் அபாயம் உள்ளதாகக் கணித்தனர். அப்படியொரு நிகழ்வு மட்டும் நடந்தால் மனித குலமே மொத்தமாக அழிந்துவிடும்.
ஏனென்றால் சூரியன் தான் நமது ஒட்டுமொத்த சோலார் சிஸ்டத்திற்கும் ஆணிவேராக இருக்கிறது. சூரிய கதிர்களைக் கொண்டே பூமியே இயங்கி வருகிறது. அப்படியிருக்கும் சூழலில் சூரியன் மீது இந்த டவர்ப் ஸ்டார் மோதினால் அது மொத்தமாக சோலார் சிஸ்டத்தையே அழிக்கும் அபாயம் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரித்தனர். கயா அளவீடு என்ற முறையில் கணக்கிட்டு இந்த எச்சரிக்கையை ஆய்வாளர்கள் கொடுத்தனர்.
ட்விஸ்ட்: இருப்பினும், இந்த கியா கணக்கீட்டில் ஆய்வாளர்கள் ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அதாவது இந்த WD 0810-353 டவர்ப் ஸ்டார் வழக்கத்திற்கு மாறாகப் பெரிய காந்தப்புலத்தைக் கொண்டுள்ளது. அதாவது இந்த வலிமையான காந்தப்புலம் என்பது அதன் பாதையை மாற்றும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அந்த WD 0810-353 டவர்ப் ஸ்டாரில் இருந்து வரும் ஒளியை ஆய்வு செய்து பார்த்ததில், அதன் பாதை மற்றும் வேகம் என்னவாக மாறும் என்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி WD 0810-353 டவர்ப் ஸ்டார் மற்றும் சூரியன் இடையே மோதல் நடைபெறாது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும், சூரியனை நோக்கிக் கூட இந்த WD 0810-353 டவர்ப் ஸ்டார் வரவில்லை என்பதை இப்போது ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் பூமி மற்றும் சோலார் சிஸ்டத்தை சூழ்ந்திருந்ததாக நம்பப்பட்ட ஆபத்து இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications