கழுத்தில் விநாயகர் டாலருடன்... ரிஹான்னா பகிர்ந்த அரை நிர்வாண படம்... கொந்தளிக்கும் ட்விட்டர்வாசிகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கழுத்தில் விநாயகர் டாலரை அணிந்தவாறு அமெரிக்காவின் பாப் பாடகி ரிஹான்னா பகிர்ந்துள்ள டாப்லெஸ் புகைப்படத்தை ட்விட்டர்வாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி பாப் பாடகி ரிஹான்னா. தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முதல் சர்வதேச பிரபலம் இவர் தான். அதற்குப் பின்னரே பல சர்வதேச பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

Rihanna shares topless picture wearing Lord Ganesha necklace sparks massive Twitter outrage

ஆனால், அப்போதே விவசாயிகளின் போராட்டம் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும் இது குறித்து வெளியாட்கள் யாரும் கருத்துச் சொல்ல தேவையில்லை என்றும் பல்வேறு இந்தியப் பிரபலங்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படமும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கழுத்தில் விநாயகர் டாலருடன் இருக்கும் டாப்லெஸ் புகைப்படத்தை ரிஹான்னா இன்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவர் பகிர்ந்த சிறிது நேரத்திலேயே இந்தப் புகைப்படம் வைரலானது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் புகைப்படம் இருப்பதாகக் கூறி, பலரும் அவருக்கு எதிரான கருத்துகளை ட்விட்ரில் பதிவிட்டு வருகின்றனர்

இந்து மதத்தில் இருக்கும் புனிதமான விநாயகரை ரிஹான்னா அவமதித்து விட்டதாகக் கூறி, ட்விட்டர்வாசிகள் மிகக் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+