குத்துச்சண்டையில் தோற்ற மைக் டைசனுக்கு ரூ.169 கோடி.. வென்ற ஜேக் பாலுக்கு எத்தனை கோடி? தலைசுற்றுதே
வாஷிங்டன்: பிரபல குத்துச்சண்டை ஜாம்பவனான மைக் டைசன் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குத்துச்சண்டையில் பங்கேற்றார். இது மைக் டைசன் ரசிகர்களை ஆர்வப்படுத்தியது. 58 வயது நிரம்பிய மைக் டைசன் இளம் வீரரான 27 வயது நிரம்பிய ஜேக் பாலை எதிர்கொண்டார். இதில் ஜேக் பால், மைக் டைசனை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில் இருவருக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
குத்துச்சண்டை ஜாம்பவனாக அறியப்படுபவர் மைக் டைசன். அமெரிக்காவை சேர்ந்த இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 1985 ம் ஆண்டு முதல் 2004 வரை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று எதிர்த்து விளையாடும் வீரர்களை வீழ்த்தி உலகம் முழுவதம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை திரட்டி வைத்திருந்தார்.

நியூயார்க்: பிரபல தொழில்முறை குத்துச் சண்டை வீரரான மைக் டைசன் நீண்ட நாட்களுக்கு பிறகு குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றிருந்தார். அவரை எதிர்த்து களமிறங்கிய 27 வயது இளைஞர் ஜேக் பால், மைக் டைசனை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
குத்துச்சண்டையில் எவ்வளவு பிரபலமோ அதேபோல் சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்கி வந்தவர் தான் மைக் டைசன். தனது பயிற்சியாளரை பிரிந்த பிறகு அவர் விதிகளை மீறியது, பாலியல் புகார் என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
இறுதியில் 2004ல் அவர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தான் 19 ஆண்டுகளுக்கு மீண்டும் மீண்டும் மைக் டைசன் குத்துச்சண்டையில் பங்கேற்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. 58 வயது நிரம்பிய மைக் டைசன் இளம் வீரரான ஜேக் பால் என்பவரை எதிர்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் உலகம் முழுவதும் இருந்த மைக் டைசன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள அர்லிங்ட்டான் ஏடி மற்றும் டீ மைதானத்தில் வைத்து போட்டி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நெட்பிளிக்ஸில் இந்த போட்டி ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று போட்டி நடந்தது. 8 சுற்றுகளாக போட்டி என்பது நடந்தது.
இதில் ஜாம்பவான் மைக் டைசனை 27 வயது இளைஞர் ஜேக் பால் வீழ்த்தினார். போட்டியின் தொடக்கம் முதல் டைசன் அட்டாக் மோடில் இறங்கினார். ஆனால் ஜேக் பால் டைசனின் எல்லா தாக்குதலிலிருந்தும் முடிந்தவரை தன்னை காப்பாற்றிக்கொண்டு எதிர்பாராத சமயத்தில் மைக் டைசன் மீது தாக்குதல் நடத்தி வெற்றியும் பெற்றார்.
இது மைக் டைசனின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தான் இந்த போட்டியில் வென்ற ஜேக் பால் மற்றும் தோற்ற மைக் டைசன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை என்பது தற்போது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது போட்டியில் வென்ற ஜேக் பாலுக்கு ரூ.338 கோடியும், தோற்ற மைக் டைசனுக்கு ரூ.169 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications