மூழ்கிய கப்பலில் கண்டெடுக்கப்பட்ட தங்க புதையல்! மதிப்பு இத்தனை கோடியாம்.. அடிச்சது ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்த 1715ம் ஆண்டு ஃப்ளோரிடாவில் கப்பல் ஒன்று மூழ்கியது. இந்த கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு அதில் தேடுதல் பணிகள் நடந்தன. இந்நிலையில் கப்பலிலிருந்து தங்க, வெள்ளி நாணயங்கள் கொண்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 1715ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி கியூபாவிலிருந்து ஸ்பெயினுக்கு கப்பல் பல சென்றுக்கொண்டிருந்தன. இந்த கப்பல்கள் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் இருந்தன. ஆனால் எதிர்பாராத விதமாக 11 கப்பல்கள் ஃப்ளோரிடாவில் புயலில் சிக்கி கடலில் மூழ்கிவிட்டன. நீண்ட காலமாக இந்த கப்பலைகளை பலரும் தேடி வந்தனர். தற்போது கப்பல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கப்பலில் சுமார் ரூ.35,000 கோடிக்கும் அதிகமான அளவில் புதையல் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

gold ship

தற்போது இந்த புதையலின் ஒரு சிறு பகுதி மட்டும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 5 தங்க நாணயங்கள் மற்றும் 1,000க்கும் அதிகமான வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மதிப்பு ரூ.8.87 கோடியாகும். இதனை '1715 ஃப்ளீட்-குயின்ஸ் ஜூவல்ஸ் எல்எல்சி' எனும் கப்பல் சிதைவு மீட்பு நிறுவனம் கண்டுபிடித்து எடுத்திருக்கிறது. 11 கப்பல்களிலும் ஆய்வு செய்து, அதில் இருக்கும் பொக்கிஷங்களை கண்டுபிடித்து தருவது என '1715 ஃப்ளீட்-குயின்ஸ் ஜூவல்ஸ் எல்எல்சி' நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நாணயங்கள் குறித்து நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநர் சால் குட்டூசோ கூறுகையில், "இந்தக் கண்டுபிடிப்பு வெறும் புதையலைப் பற்றியது மட்டுமல்ல, அது சொல்லும் கதைகளைப் பற்றியது. ஒரே மீட்பில் ஆயிரம் நாணயங்களைக் கண்டுபிடிப்பது அரிதானதும் அசாதாரணமானதுமானது. ஒவ்வொரு நாணயமும் வரலாற்றின் ஒரு அங்கம். ஸ்பானிஷ் சாம்ராஜ்யத்தின் பொற்காலத்தில் வாழ்ந்த, வேலை செய்த மற்றும் பயணம் செய்த மனிதர்களுடனான தொடர்புதான் இந்த நாணயங்கள்.

ஒவ்வொரு கண்டுபிடிப்பும் 1715ஆம் ஆண்டு மூழ்கிய கப்பலின் மனிதக் கதையை ஒன்றிணைக்க உதவுகிறது. இந்தக் கலைப்பொருட்களைப் பாதுகாத்து ஆய்வு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இதனால் வருங்கால சந்ததியினர் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை பற்றி தெரிந்துக்கொள்ள முடியும்" என்று தெரிவித்தார். புயலின் சீற்றத்தால், கப்பல் சிதறி நாணயங்கள் பரவின.

ஃப்ளோரிடாவின் 'ட்ரெஷர் கோஸ்ட்' பகுதியிலிருந்து புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இக்கடல் பகுதி முழுவதும், நவீன மீட்புப் பணிகள் நடக்கின்றன. தனியார் நிறுவனம் மட்டுமல்லாது, மாநில அரசும் இப்பகுதியை கடுமையாக மேற்பார்வை செய்து வருகிறது. தொல்லியல் வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுகின்றன. மீட்கப்பட்ட நாணயங்கள் மிகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்படும்.

பொதுமக்களின் பார்வைக்கு இவை திட்டமிடப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்கள் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படும். ஃப்ளோரிடா மக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+