உக்ரைன் போரை நிறுத்த முடியாது.. டிரம்புக்கு வாழ்த்து சொல்லி புதின் வைத்த ட்விஸ்ட்.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக நேற்று டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில் அவருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்தார். டொனால்ட் டிரம்ப் அதிபரானதால் விரைவில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்ற நிலையில் விளாடிமிர் புதின் ட்விஸ்ட் வைத்துள்ளார். இது டொனால்ட் டிரம்பை கோபப்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

donald trump inauguration donald trump vladimir putin

இதையடுத்து டொனால்ட் டிரம்ப் நேற்று முறைப்படி அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றார். நேற்று வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் நடைபெற்ற விழாவில் அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜேடி வான்ஸ் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

அமெரிக்கா - ரஷ்யா இடையே நல்லுறவு என்பது இல்லை. அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனால் தான் உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டில் ரஷ்யா போரை தொடங்கியதும் அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. அதுமட்டுமின்றி ரஷ்யாவை தாக்க தேவையான உதவிகளை உக்ரைனுக்கு, அமெரிக்கா வழங்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை வைத்து ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது உக்ரைன்.

இதனால் உக்ரைன் மீது மட்டுமின்றி அமெரிக்கா மீதும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் கடும் கோபமடைந்துள்ளார். இருப்பினும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் கட்சியின் கமலா ஹாரிஸ் தோற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். ஜோ பைடனை ஒப்பிடும்போது டொனால்ட் டிரம்புடன், விளாடிமிர் புதினுக்கு ஓரளவு நல்லுறவு உள்ளது. இதனால் டொனால்ட் டிரம்புடன் போர் நிறுத்தம் தொடர்பாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சமீபத்தில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்து இருந்தார்.

அதோடு தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்புக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி நேற்றைய தினம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பாகவும் விளாடிமிர் புதின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக நேற்று ரஷ்யா பாதுகாப்பு கவுன்சில் மீட்டிங் என்பது விளாடிமிர் புதின் தலைமையில் காணொலி மூலம் நடந்தது.

இதில் விளாடிமிர் புதின் பேசும்போது, ‛‛அமெரிக்காவின் 47 வது அதிபராக பொறுப்பேற்கும் டொனால்ட் டிரம்புக்கு நாங்கள் வாழ்த்து தெரிவிக்கிறோம். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அவரை கொலை செய்ய முயற்சி நடந்தது. அதையும் மீறி மாபெரும் வெற்றியை டிரம்ப் பெற்றுள்ளார். டொனால்ட் டிரம்புக்கு நாங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறோம்.

அமெரிக்கா - ரஷ்யா இடையேயான உறவு என்பது கடந்த கால ஆட்சியில் பின்னடைவை சந்தித்தது. அமெரிக்காவின் எந்த அரசுடனும் சேர்ந்து செயல்பட ரஷ்யா தயாராகவே உள்ளது. அமெரிக்காவுடன் சமமான, பரஸ்பர மரியாதை அடிப்படையில் கட்டமைக்கப்படும் உரையாடலுக்கு ரஷ்யா தயாராக இருக்கிறது. டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கின்றனர்.

அதேவேளையில் எங்கள் நாட்டு மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சண்டையை தொடருவோம். அதுதான் ராணுவ சிறப்பு நடவடிக்கையின் குறிக்கோளாக உள்ளது'' என்றார். இதன்மூலம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக கூறியுள்ள விளாடிமிர் புதின் ரஷ்யா மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சண்டையை தொடருவோம். அதுதான் ராணுவ சிறப்பு நடவடிக்கையின் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருவதாக நாம் கூறி வருகிறோம். ஆனால் ரஷ்யா இதுவரை அதனை போர் என்று ஒருபோதும் கூறியது இல்லை. தங்களின் நாட்டின் பாதுகாப்பு கருதி உக்ரைன் மீது ராணுவ சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தான் தெரிவித்து வருகிறது. நேற்று ரஷ்யா அதிபர் விளாமிர் புதினும், டொனால்ட் டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தாலும் கூட கடைசியில் நாட்டின் மக்களின் நலனை பாதுகாக்க சண்டை செய்வோம். அதுதான் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று கூறியுள்ளார். இதன்மூலம் மறைமுகமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தொடருவோம் என்பதையே விளாடிமிர் புதின் எடுத்துரைத்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் நினைக்கின்றனர்.

விளாடிமிர் புதினின் இந்த பேச்சால் டொனால்ட் டிரம்ப் டென்ஷனாகி உள்ளார். இதுதொடர்பாக அவரது பதவியேற்புக்கு பிறகு பத்திரிகையாளர்கள் டொனால்ட் டிரம்பிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛‛அவர் (விளாடிமிர்) ரஷ்யாவை சிதைத்து வருகிறார். போர் நிறுத்தத்துக்கான ஒப்பந்தத்தை அவர் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரஷ்யா பெரிய பிரச்சனைகளை சந்திக்கும்'' என்று வார்னிங் செய்துள்ளார். அதேவேளையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+