உலகின் அதிவேகமான கார்.. டெஸ்லாவை நம்பி ஏமாந்தது போதும்! கொந்தளித்த சாம் ஆல்ட் மேன்
வாஷிங்டன்: உலகின் அதிவேகமான கார் என்று சொல்லப்பட்ட டெஸ்லாவின் ரோட்ஸ்டர் ரக கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த காரை வாங்க பலரும் முன்பதிவு செய்திருந்தனர். அதில் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேனும் ஒருவர். ஆனால் இவர் தற்போது இந்த காருக்கான முன்பதிவை கேன்சல் செய்து, தனது பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார்.
உலகின் மிக வேகமாக விமானம், வேகமான கார் இவற்றை முதல் ஆளாய் வாங்கிவிட வேண்டும் என்று, காசு புழங்கும் பணக்காரர்களுக்கு வித்தியாசமான ஆசைகள் உருவாகும்.

அப்படித்தான் சாம் ஆட்ல்மேனுக்கும் ஆசை இருந்தது. எலான் மஸ்க்கின் டெஸ்லாவின் ரோட்ஸ்டர் கார் அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் காராக இருக்கும் என்று பேசப்பட்டது. காரணம் இதன் வேகம்தான். அதாவது வெறும் 1.9 விநாடிகளில் 0 லிருந்து 60 கி.மீ வேகத்தை இக்கார் தொட்டுவிடும். தொழில்நுட்பத்தின் உச்சத்தை நிரூபிக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வகை காரில் சிறிய ராக்கெட் த்ரஸ்டர்கள் பயன்படுத்தப்படும் என்பதுதான் முக்கியமான அம்சமே. மொத்தம் 10 சிறிய ராக்கெட் த்ரஸ்டர்கள் வேகத்தை கொடுக்க பயன்படுத்தப்படுகின்றன.
இந்த கார் வேகமாக போகும்போது, ஒரு கட்டத்தில் குறைந்த தூரத்திற்கு பறக்க செய்யும் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி தொழில்நுட்பம் இந்த காரில் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணம். கடந்த 2018ம் ஆண்டு இந்த கார் குறித்த அறிவிப்பு வெளியானது. சோகம் என்னவெனில் இன்று வரை ஒரேயொரு கார் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்பதுதான். 7.5 ஆண்டுகள் ஆகிவிட்டன. காருக்காக ரூ.44.35 லட்சம் செலுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். அதில் ஆல்ட்மேனும் ஒருவர்.
வாங்கின காசுக்கு எலான் மஸ்க் பதில் ஏதும் அளிக்காததால் தற்போது, தனது பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார் சாம் ஆல்ட்மேன். இந்த காருக்கான முன்பதிவு மின்னஞ்சலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கிறார் ஆல்ட்மேன். இந்த சம்பவம் டெஸ்லா கார் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மட்டுமல்லாது டெக் உலகிலும் பேசுபொருளாகியிருக்கிறது.
ஆல்ட்மேன் காசை திரும்ப கேட்டதற்கு வேறு காரணம் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அதாவது ஓபன் ஏஐ நிறுவனத்தை உருவாக்கும்போது எலான் மஸ்க்கும், ஆல்ட்மேனும் சேர்ந்துதான் இருந்தார்கள். ஆனால் தற்போது பிரிந்துவிட்டார்கள். ஓபன் ஏஐ உருவாக்கப்பட்டது லாபத்த நோக்கமாக கொண்டு கிடையாது. இது லாப நோக்கமற்ற நிறுவனமாகும். ஆனால், மைக்ரோசாப்டுடன் இந்நிறுவனம் கூட்டு சேர்ந்து வணிகத்தில் இறங்கியிருக்கிறது. எனவே நிறுவனத்தின் உரிமையாளர் என்கிற அடிப்படையில், இதற்கு எதிராக எலான் மஸ்க் வழக்கு தொடுத்திருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே தற்போது டெஸ்லாவின் ரோட்ஸ்டர் காரின் முன்பதிவு தொகையை ஆல்ட்மேன் திரும்ப கேட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது. எது எப்படி இருப்பினும், உலகின் அதிவேகமான கார் கடைசி வரை கனவாகவே போய்விட்டது என்பது கார் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications