"20 கால்கள்.." இது என்ன பார்க்கவே பயங்கரமா இருக்கு! ஆழ்கடலில் ஆய்வாளர்களுக்கு காத்திருந்த செம ஷாக்
வாஷிங்டன்: கடல் குறித்து நமக்கு வெறும் 10% மட்டுமே தெரியும் என்று பொதுவாகச் சொல்வார்கள். அது எந்தளவுக்கு உண்மை என்பதை காட்டும் விதமாக புதிய உயிரினம் ஒன்று அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பனிப்பாறைகளால் சூழ்ந்து இருக்கும் அண்டார்டிகா கண்டம், புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் மிக வேகமாக உருகி வருகிறது. அதேபோல அண்டார்டிகா கண்டத்தில் நடக்கும் ஆய்வுகளும் அதிகமாக நடந்து வருகிறது.

இதில் அண்டார்டிகாவில் நடந்த ஆய்வு குறித்து சில முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அங்குப் பெருங்கடல் ஆழத்தில் சுமார் 20 கால்களைக் கொண்ட ஒரு கடல் உயிரினத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எங்கே: அண்டார்டிக் பெருங்கடலின் ரொம்பவே ஆழமான பகுதியில் அவர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.. 20 கால்களைக் கொண்டதாக இந்த உயிரினம் இருக்கிறது. மேலும், இதன் உடல் அமைப்பும் ரொம்பவே தனித்துவமானதாக ஸ்ட்ராபெரியை போல இருக்கிறது.. அங்கு ஆய்வுக்காக அவர்கள் கடலை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது சிக்கிய வலையில் தான் இந்த தனித்துவமான உயிரினம் இருந்தது.
இது குறித்த தகவல்கள் இன்வெர்டெப்ரேட் சிஸ்டமேடிக்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டது. அண்டார்டிக் பெருங்கடலில் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வுக் குழு 2008 முதல் 2017 வரை பல காலங்களில் பெதர் ஸ்டார் என்ற வகை உயிரினம் குறித்த ஆய்வுக்காக அங்குச் சென்றுள்ளனர். பார்க்க நட்சத்திரங்களைப் போன்ற உடல் அமைப்பைக் கொண்ட கடல் உயிரினத்தைக் கண்டறிய அவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்த மிக பெரிய பெதர் ஸ்டார் 65 அடி முதல் 65,000 அடி வரை நீருக்கு அடியில் வாழக்கூடியது... இவை நீந்துவதைப் பார்த்தால் ஏதோ இது ஏலியனயாக இருக்குமோ என்பதைப் போலவே தோன்றும் அளவுக்கு இது இருக்குமாம்.. இந்த பெதர் ஸ்டாரும் நாம் பொதுவாகப் பார்க்கும் ஸ்டார் ஃபிஷ்ஷை போல முதுகெலும்பு இல்லாத உயிரினம் தான். இருப்பினும், இரண்டிற்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது.
புது உயிரினம்: இந்த பெதர் ஸ்டார் குறித்த ஆய்வின் போது தான் ஆய்வாளர்கள் தனித்துவமான உடல் அம்சங்களைக் கொண்ட ஒரு புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்தனர். இதை அவர்கள் Promachocrinus fragarious என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இதை அண்டா அண்டார்டிக் ஸ்ட்ராபெரி பெதர் ஸ்டார் (Antarctic strawberry feather star) என்றும் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் 20 கால்களை கொண்ட இந்த விலங்கின் உடல் அமைப்பு ஸ்ட்ராபெரியை போல இருப்பதால் அவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்.

இந்த அண்டார்டிகா ஸ்ட்ராபெரி பெதர் ஸ்டார் உயிரினத்தின் மைய உடல் பகுதி பார்க்க ஸ்ட்ராபெரி போல இருக்கிறது.. அதில் இருந்து 20 கால்கள் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஊதா நிறத்தில் இருக்கும் இந்த உயிரினம் தேவைப்பட்டால் தனது நிறத்தை அடர் சிவப்பு நிறமாகவும் மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதேநேரம் இது எவ்வளவு பெரியதாக இருந்தது என்பது குறித்த தகவல்களை ஆய்வாளர்கள் தெரிவிக்கவில்லை.
எங்கு வாழும்: இருப்பினும், அது பெரியது என்று மட்டும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் வடிவம் மற்றும் டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தெற்கு பெருங்கடல் பகுதியில் 215 அடி முதல் 3,840 அடி வரை ஆழத்தில் வாழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த படங்களையும் ஆய்வாளர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
பார்க்க வெள்ளை நிறத்தில் இது சற்று பயங்கரமானதாகவே தெரிகிறது. குறுகிய மற்றும் நீண்ட என இரு வகையான கால்களை இது கொண்டிருக்கிறது. நடுவில் ஸ்ட்ராபெரி போன்ற உடல் அமைப்பைக் கொண்டதாக இது இருக்கிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications