கருத்தரிப்பு பிரச்னைக்கு வந்தாச்சு சூப்பர் தீர்வு.. அந்த புரதம் ரொம்பவே முக்கியமாம்! தெரிஞ்சுகோங்க
வாஷிங்டன்: கருத்தரிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்குத் தீர்வு அளிக்கும் வகையில் ஆய்வாளர்கள் புதிய தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த நவீன உலகத்தில் கருத்தரிப்பு என்பது மிகப் பெரிய சிக்கலாக உள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு உள்ளிட்டவை காரணமாகக் கருத்தரிப்பு என்பது பிரச்சினையாக உள்ளது.
இதன் காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏகப்பட்ட கருத்தரிப்பு மருத்துவமனைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதுவே மிகப் பெரிய ஒரு பிஸ்னஸாகவும் மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

கருத்தரிப்பு
இந்நிலையில், இதற்குத் தீர்வு காணும் வகையில் புதிய புரதத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது விந்தும் முட்டையும் ஒன்றினையும் போது இந்த புரதம் மிக முக்கிய பங்காற்றுகிறது. இது கருத்தரிப்பு சமயங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல பல புதிய கருத்தடை சாதனங்களும் கூட இதை மையப்படுத்தி சந்தைக்கு வரும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மியா
இந்த புரதத்திற்கு மியா என்று ஆய்வாளர்கள் பெயர் வைத்து உள்ளனர். மியா என்பது கிரேக்க தாய்மையின் தெய்வம் ஆகும். செக் குடியரசு நாட்டின் ஆய்வாளர் தலைமையில் உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர். இதில் மனித ஓசைட் புரதங்களின் உற்பத்திக்குச் செல் கலாசாரங்களின் வளர்ச்சியை எந்தளவு முக்கியம் என்பதையும் விளக்குவதாக உள்ளது.

புரதம்
இந்த ஆய்வின் முடிவுகள் சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. கேமட் ஃபியூஷன் ( gamete fusion) என்பது மனிதர்கள் உட்பட அனைத்து பாலூட்டிகளின் கருத்தரிப்பின் ஒரு முக்கியமான நிகழ்வாகும். பெண்ணின் முட்டையில் ஒரு புதிய Fc receptor போன்ற புரதம் 3-ஐ கண்டுபிடித்துள்ளது. இந்த புரதம் தான் முட்டையையும் விந்தணுவையும் இணைப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகள் இனப்பெருக்கம் செய்ய இது மிகவும் முக்கியமானதாகும்.

சர்வதேச ஆய்வு
இது குறித்து செக் குடியரசு ஆய்வாளர் கூறுகையில், "சுமார் 20 ஆண்டுகளாக இந்த ஆய்வை நடத்தினோம். சர்வதேச ஆய்வாளர்களின் ஒத்துழைப்புடன் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உட்பட உலகம் முழுவதிலும் இருந்து 17 நாடுகளில் இதை மேற்கொண்டோம். பிரிட்டன் நாட்டில் தொடங்கிய இந்த ஆய்வை மெல்ல பல்வேறு நாடுகளுக்கும் விரிவு செய்தோம். அதில் தான் இத்தனை கண்டுபிடிப்புகளும் கிடைத்துள்ளன" என்றார்.

ஏன் முக்கியம்
இதில் தான் பெண்ணின் முட்டையில் இருக்கும் புரதம் இனப்பெருக்கத்திற்கு முக்கியமானது என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த புரதம் பெண்ணின் முட்டைக்கு அருகே எதாவது விந்தணு வருகிறதா என்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கும். இது தான் கருத்தரிப்பிற்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இப்படிக் கவனித்துக் கொண்டே இருக்கும் புரதம், விந்தணு வரும்போது அதை அப்படியே முட்டைக்குள் பிணைக்க உதவுகிறது.

பிணைப்பு
இருப்பினும், இந்த புரதம் ஏன் இப்படி நடந்து செய்கிறது என்று ஆய்வாளர்களுக்குத் தெரியவில்லை. உலகெங்கும் தொடர்ச்சியாக இந்த ஆய்வு திரும்பத் திரும்ப நடத்தப்பட்டு உள்ளது. அப்போது தான் பிணைப்பு ஏற்பட இந்த புரதமே முக்கிய காரணம் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். கருத்தரிப்பு என்பது உலகெங்கும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ள நிலையில், இந்த ஆய்வு அதற்கான முக்கிய தீர்வாக அமையலாம்.

கருத்தடை சாதனங்களுக்கும் உதவும்
பொதுவாக எந்தவொரு ஆய்வு என்றாலும் அது விலங்களிடம் முதலில் நடத்தப்படும். அது பாதுகாப்பானது என்று உறுதியான பின்னரே மனிதர்களுக்கு நடத்தப்படும். ஆனால், இந்த புரதம் மனித இனத்தில் மட்டுமே உள்ளது என்பதால் இதற்கான ஒப்புதலை வாங்குவதற்கு ஆய்வாளர்கள் பெரிய சிரமத்தை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் புரதம் முக்கியமானது என்பதால் கருத்தடைக்கும் இதைப் பயன்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications