மத்திய தரைக்கடல் அடியில் சிக்கிய "பேய் துகள்" வியந்த விஞ்ஞான உலகம்! மர்மம் விலகுமா? ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: மத்திய தரைக்கடலில் சக்தி வாய்ந்த பேய் துகள்(ghost particle) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரினோ டிடெக்டர் வாயிலாக இந்த பார்ட்டிகிள் கண்டறியப்பட்டுள்ளது. மனித குலத்தால் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே இதுதான் சக்தி வாய்ந்த நியூட்ரினோ பார்டிகிள் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். பேய் துகள் என்றால் என்ன? என்பது குறித்து ஆய்வாளர்கள் சொல்வதையும் இங்கு பார்க்கலாம்.
நாம் வாழும் இந்த பூமியில் இன்னும் மனிதனால் முழுமையாக கண்டுபிடிக்க முடியாத பல மர்மங்கள் நிலவுகின்றன. பூமி எப்படி உருவானது என்பது முதல், முதலில் உயிர்கள் எப்படி உருவானது என்பது வரை முழுமையாக விடை காண முடியாத பல விசித்திரங்கள் இந்த பூமியில் அடங்கியுள்ளன.

பேய் துகள்
இந்த மர்மங்களை கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கடலுக்கு அடியில் புதைந்துள்ள பல மர்மங்களுக்கு விடை தெரிந்தால் பூமியின் தோற்றம் குறித்த ஆராய்ச்சியில் முக்கிய திருப்புமுனை ஏற்படும் என நம்பப்படுகிறது. இதனால் விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தான் மத்திய தரைக்கடலில் சக்தி வாய்ந்த பேய் துகள்(ghost particle) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரினோ டிடெக்டர் வாயிலாக இந்த பார்ட்டிகிள் கண்டறியப்பட்டுள்ளது. மனித குலத்தால் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே இதுதான் சக்தி வாய்ந்த நியூட்ரினோ பார்டிகிள் என்றும் இதன் மூலம் நியுட்ரினோ புரிந்து கொள்ளும் முயற்சியில் இன்னும் முன்னேறி கொண்டு செல்லும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மத்திய தரைக்கடலின் அடிப்பகுதியில் இந்த நியூட்ரினோ மேம்பட்டு வருகிறதாம்.
30 மடங்கு சக்தி வாய்ந்தது
பூமியில் இதுவரை கண்டறியப்பட்ட துகள்களை விட 30 மடங்கு ஆக்டிவாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இந்த துகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த துகளானது பால்வழி அண்டத்திற்கு வெளியில் இருந்து வந்து இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். KM3NeT என்றும் அழைக்கப்படும் கியூபிக் கிலோமீட்டர் நியூட்ரினோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த துகள்களை கண்டறிந்துள்ளனர்.
பேய் துகள் என்றால் என்ன?
நாம் வாழும் இந்த பூமியில் நம்மை சுற்றி இன்னும் நம்மால் முழுமையாக அறிய முடியாத மர்மமான 'பேய்' துகள்கள் (Ghost particles) உள்ளதாகவும், இந்த பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மை பற்றிய நமது புரிதலை மேம்படுத்த அவை உதவும் என்றும் சில இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். இதுபோன்ற துகள்களைக் கண்டறிய தற்போது பயன்பாட்டில் உள்ள கருவிகளை விட ஆயிரம் மடங்கு அதிக உணர்திறன் கொண்ட ஒரு புதிய கருவி இந்த சோதனையில் பயன்படுத்தப்படும்.
நியூட்ரினோக்களை பொறுத்தவரை நட்சத்திரங்களில் இருந்து வெளிப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றின் மிகக் குறைந்த நிறை மற்றும் கண்டறிய முடியாமல் இருப்பதன் காரணமாக இவை பேய் துகள் என்று அழைக்கப்படுகின்றன. பிரபஞ்சத்தில் இரண்டாவது அதிகம் காணப்படும் துகள்கள் நியூட்ரினோதான் எனவும் இவை எந்த மின்சக்தியும் கொண்டு செல்வது இல்லை எனவும், மனித உடல்வழியாக பெரிய எண்ணிக்கையில் அதாவது பல டிரில்லியன் எண்ணிக்கையில் நியூட்ரினோக்கள் கடந்து செல்லும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இத்தாலிய ஆய்வாளர் ரோசா கோனிகிலியோன் இது தொடர்பாக கூறுகையில், " நியூட்ரினோக்கள் பூமியை அடையும் போது பிரபஞ்சத்தின் சிறப்பு தூதர்களாக" செயல்படுகின்றன. அவை பிரபஞ்சத்தின் தொலைதூரப் பகுதிகளைப் பற்றிய ஒரு பார்வையை(glimpse) வழங்குகின்றன. நியூட்ரினோக்களை தாங்களாகவே கண்டறிவது விஞ்ஞானிகளுக்கு கடினமாக இருந்தாலும், நியூட்ரினோக்கள் பொருளுடன் தொடர்பு கொள்ளும்போது என்ன நடக்கிறது என கவனிக்க முடிகிறது" எனவும் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications