33 ஆயிரம் கிமீ வேகத்தில் நகரும் புயல்! விஞ்ஞான உலகம் அதிர்ச்சி.. பூமிக்கு வந்தால் என்ன ஆகுமோ தெரியல
வாஷிங்டன்: ஜெட் வேகத்தை விட அதிவேகத்தில் அதாவது, மணிக்கு 33 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நகரக்கூடிய சூப்பர்சோனிக் ஜெட் புயல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். புறக்கோள் ஒன்றில் இந்த ஜெட் புயல் நகர்ந்து வருகிறது. இப்படி ஒரு வேகத்துடன் பூமியில் தாக்கினால், தடயமே இல்லாமல் உயிர்கள் மொத்தமாக காலியாகிவிடும், அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பூமியில் இதுவரை தாக்கிய புயல்களில் மிகவும் அதிவேகம் என்றால் மணிக்கு 403 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதுதான். 100 கிலோ மீட்டருக்கு மேல் சூறைக்காற்று தாக்கினாலே கடுமையான சேதம் ஏற்படும். மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து கடுமையான சேதம் ஏற்படுவதை பார்த்து இருக்கிறோம்.

அதே நேரத்தில் 400 கிலோ மீட்டர் வேகம் என்றால் எப்படி காற்று வீசும், என்னென்ன சேதம் ஏற்படும் என்று கற்பனை செய்து பாருங்கள்.. ஆனால், இதெல்லாம் என்ன வேகம் என்று சொல்லும் விதமாக மணிக்கு 33 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு புயல் நகர்ந்து வருகிறதாம். இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள புறக்கோள் ஒன்றில் இந்த சூப்பர்சோனிக் ஜெட் ஸ்டீரிம் என்று அழைக்கப்படக் கூடிய புயல் நகர்ந்து வருகிறது.
விண்வெளியில் இதுவரை கண்டறியப்பட்ட புயல்களிலேயே இதுதான் அதிவேக புயலாக கருதப்படுகிறது. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "இதுபோன்ற மிக மோசமான வானிலை பூமியில் ஏற்பட்டால், பூமியில் உயிர்கள் வாழ்வது என்பது கிட்டதட்ட முடிந்து விடும் நிலைக்கு சென்று விடும்" என்றனர்.
WASP-127b என்று அழைக்கப்பட கூடிய இந்த புறக்கோள் பூமியில் இருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளான வியாழன் கோளை விட சற்று பெரிய கோளாக இது உள்ளது. இது முற்றிலும் வாயுக்களால் நிரம்பியது. சூரிய மண்டலத்தில் காணப்படும் வாயுக்கோள்களில் காணப்படும் கோடுகள் போன்ற கோடு இந்த கிரகத்திலும் காணப்படுகிறது.
இந்த வாயுக்கோளில் நகரும் புயலின் வேகம் மர்மாக இருந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதி ஜர்னல் அஸ்ட்ரோனாமி மற்றும் அஸ்ட்ரோபிசிக்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில் புயலின் நகரும் வேகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.. சிலியில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தில் (ESO) உள்ள மிகப் பெரிய தொலைநோக்கியை (VLT) பயன்படுத்தி, விஞ்ஞானிகள் இந்தக் காற்றின் வேகத்தை மதிப்பிட்டுள்ளனர். இந்த புயல் வினாடிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
அந்த கோளின் ஒருபகுதி வளிமண்டலமே அதிவேகத்தில் நகர்ந்து வருகிறதாம். ஒரு வினாடிக்கு 9 கிலோ மீட்டர் வேகம் என்பது புயலின் வகை 5- ஐ விட 130 மடங்கு வேகம் ஆகும். புயலின் வகை 5- என்பது 150 கிலோ மீட்டருக்கு மேல் 252 கிலோ மீட்டர் வேகம் வரை ஆகும். சூரிய மண்டலத்திற்குள் உள்ள நெப்டியூன் கோளில் 1800 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய புயல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதை விட 18 மடங்கு வேகத்தில் நகரும் புயலை கண்டுபிடிப்பது இதுதான் முதல் முறை என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
WASP-127b புறக்கோளின் வளி மண்டலத்தை ஆய்வு செய்த போது, அதன் மேகக் கூட்டங்களில் நீராவி மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். துருவ பகுதிகளில் உள்ள கோள்களில் மிகவும் குளிர்ச்சியான கோளாகவும் இது அறியப்படும். பகல் மற்றும் இரவு நேர வெப்பத்திற்கு சிறிய வித்தியாசம்தான் இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications