இந்தியா மீது வரி விதிக்க சொன்ன டிரம்ப்.. திட்டவட்டமாக மறுத்த ஐரோப்பிய நாடுகள்.. வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது கூடுதல் வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஐரோப்பிய நாடுகள் நிராகரித்துவிட்டதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் பொறுப்பை அமெரிக்கா மட்டுமே ஏன் சுமக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அமெரிக்காவும் கூட கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்து. மேலும், ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில், அந்ந நாட்டுடன் வர்த்தகம் செய்யும் உலக நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என கூட அமெரிக்கா மிரட்டியது.

Tariffs on India India US Trump

ரஷ்யாவின் தடை

ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான 2026ம் ஆண்டு லிண்ட்சே கிரஹாம் பொருளாதார தடைகள் சட்டத்தின் கீழும் கட்டுப்பாடுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே அதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து 60 நாட்களில் ஆலோசித்து முடிவெடுப்போம் எனவும் கூறப்பட்டு இருந்தது.

வரி விதிக்க கேட்டோம்

இதற்கிடையே சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது கடந்தாண்டே ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்கும் நாடுகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகள்

இது குறித்து அவர் கூறுகையில், "ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் சீனா, இந்தியா மீது வரிகளை விதிக்க ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் கேட்டோம். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். அப்படியிருக்க இந்த சுமையை அமெரிக்கா ஏன் ஏற்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். ரஷ்யா மீதான தடைகள் எதுவும் இப்போது நீக்கப்படவில்லை என்ற பெசென்ட், ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட், லுகோயில் மீது டிரம்ப் விதித்த தடைகள் அந்நாட்டின் எரிசக்தித் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்தாலும், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து வாங்குவதாக பெசென்ட் விமர்சித்தார். ரஷ்யாவில் இருந்து சுமார் 8 பில்லியன் டாலருக்கும் அதிகமான எரிசக்தியை ஐரோப்பிய நாடுகள் வாங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாய் திறக்கவே இல்லை

அதேபோல உக்ரைன் அமெரிக்காவின் நட்பு நாடா என்று நிகழ்ச்சியில் மூன்று முறை கேட்கப்பட்டபோதும், பெசென்ட் நேரடியாக அதற்கு பதிலளிக்கவில்லை. உக்ரைனுக்கு உளவு தகவல்கள், ஸ்டார்லிங்க் ஆதரவு மற்றும் நேட்டோ நாடுகள் மூலம் அமெரிக்க ஆயுதங்களை வழங்க அனுமதி அளிப்பதாக குறிப்பிட்டார். அதேநேரம் கடைசி வரை உக்ரைன் நட்பு நாடா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் தரவே இல்லை. டிரம்ப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மட்டும் பெசென்ட் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் கிட்டத்தட்ட இதே கருத்துகளை தான் தெரிவித்தார். இந்தியா போன்ற நாடுகள் தங்களது எரிசக்தி தேவைகளை உடனடியாக மாற்றி கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட அவர், பாதிப்புகளை ஆய்வு செய்யவே 60 நாட்கள் அவகாசம் தரப்பட்டதாக குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+