"நான் பிரப்போஸ் செய்ய போறேன்.." ஆண் சீல் கொடுத்த க்யூட் கிப்ட்..துள்ளி குதித்த காதலி! க்யூட் வீடியோ
வாஷிங்டன்: ரொமேன்டிக் சீல் ஒன்று தனது காதலியை கரெக்ட் செய்யச் செய்த செயலின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது அன்பும் காதலும் தான்! ஒவ்வொரு நபரும் தங்கள் அன்பை ஒவ்வொரு முறையில் வெளிப்படுத்துவார்கள்.
அதுபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப் பலரும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

கியூட் வீடியோ
மனிதர்கள் தங்களுக்குப் பிடித்தவர்கள் மீதான காதலைக் காட்டப் பூக்கள், கிப்ட்களை வாங்கிக் கொடுப்பார்கள். அதேபோலத் தான் ரொமேன்டிக் சீல் ஒன்று தனது காதலியைப் பூங்கொத்து கொடுத்து கரெக்ட் செய்துள்ளது. Creature Nature என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த வீடியோ, இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பெண் சீல் இதை விட மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று கேப்ஷனில் வீடியோவை பகிர்ந்து உள்ளனர்.

சீல்
அந்த வீடியோவில் ஒரு நீச்சல் குளத்தில் இரு சீல்கள் இருக்கிறது. அதில் ஆண் சீல் ஒன்று பூக்களை எடுத்துக் கொண்டு செல்கிறது. பூக்களை நேரடியாகப் பெண் சீல் ஒன்றுக்கு அது தருகிறது. ஆரஞ்சு டூலிப் பூக்களை அந்த பெண் சீலிடம் கொடுக்கிறது. அதை மிகவும் மகிழ்ச்சியாக அந்த பெண் சீல் வாங்கிக் கொள்கிறது. இரு சீல்களுக்கும் இடையே இருக்கும் காதலை இது வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

பூக்கள்
இந்த கியூட் வீடியோவை தான் இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், அந்த பூக்களை வாங்கிக் கொண்ட பெண் சீல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பல முறை சுற்றுகிறது. அது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது அதன் முகத்தைப் பார்த்தாலேயே தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது.

நெட்டிசன்கள்
இந்த வீடியோ நெட்டிசன்கள் மனதை அள்ளிவிட்டது என்றே சொல்லலாம். விலங்குகளுக்கும் கூட எது உண்மையான காதல் என்று தெரிந்து உள்ளதாக ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் உண்மையான காதல் எப்போதும் கொண்டாடப்படும் என்று தெரிவித்து உள்ளார். இன்னும் பலர் அந்த இரு விலங்குகளின் செயல்களும் க்யூட்டாக உள்ளதாகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications