3 நாள் அமெரிக்கா பயணம்! நியூயார்க்கிற்கு சென்ற பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு! உச்சக்கட்ட பாதுகாப்பு
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் பிரதமர் மோடிக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் சிறப்பு அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல திட்டமிட்டமிட்டார். இதற்கான பயண திட்டங்கள் கடந்த மாதமே தயாராகி இருந்தது.

இதையடுத்து டெல்லியில் அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அவர் இன்று இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரை சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து நாளை பிரதமர் மோடி ஐநா சபை தலைமை அலுவலகத்தில் நடக்கும் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்கிறார். அதன்பிறகு வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடி நாளை இரவு அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில் பைடனை சந்திக்க உள்ளார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜோபைடன் சார்பில் சிறப்பு விருந்து அளிக்கப்பட உள்ளது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஏராளமான இந்திய வம்சாவளியினர் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகு .நாளை மறுநாள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதற்கு பிறகு ஓய்வெடுக்கும் மோடி, அன்று இரவு அமெரிக்க அரசு சார்பில் அதிபர் ஜோபைடன் அளிக்கும் இரவு விருந்தில் கலந்துகொள்கிறார்.
இதையடுத்து 23ம் தேதி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கிறார். பிறகு அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களை சந்திப்பார். மேலும் அன்று இரவு இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கம் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாதுகாப்பு விவகாரங்கள், தொழில், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், தொலைத்தொடர்பு, விண்வெளி துறைகள் சார்ந்த விவாதங்களை இருதலைவர்களும் மேற்கொள்ள உள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் அவர் தங்கும் இடங்களை சுற்றி பல கட்ட அடுக்குகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 23ம் தேதி அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடிக்கும் பிரதமர் மோடி அங்கிருந்து எகிப்து புறப்பட்டு செல்ல உள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications