டெஸ்லா கார் பேட்டரியை மாற்ற ரூ 17 லட்சமா?.. "மஸ்க் சொல்லியும் கேட்காமல்" கோபக்காரராக மாறிய ஓனர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டெஸ்லா காரின் பேட்டரியை மாற்ற ரூ 17 லட்சம் கேட்டதால் ஆத்திரமடைந்த ஓனர், அந்த காரை வெடி வைத்து தகர்த்தெறிந்தார்.

நடந்து செல்பவர்கள் சைக்கிளுக்கு ஆசைப்படுவார்கள். சைக்கிளில் செல்பவர்கள் இரு சக்கர வாகனத்திற்கும், இரு சக்கரத்தில் செல்பவர்கள் ஒரு சிறிய காரையாவது வாங்கி விட விரும்புவர். இது போல் நடுத்தர மக்களும் கார் வாங்க வேண்டும் என்ற முனைப்புடன் டாடாவின் நானோ கார்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது அதன் உற்பத்தி சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஃபின்லாந்தில் ஒருவர் தனது டெஸ்லா காரை வெடிபொருள் கொண்டு வெடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபின்லாந்தை சேர்ந்த தூமஸ் கடைனென் என்பவர் 2013 ஆம் ஆண்டு டெஸ்லா மாடல் எஸ் வகை காரை வாங்கினார். இவரது கிராமம் பனிக்கட்டிகள் சூழ்ந்த கிராமமாகும்.

தூமஸ் கடைனென்

தூமஸ் கடைனென்

டெஸ்லா கார் குறித்து தூமஸ் கடைனென் கூறுகையில் டெஸ்லா கார் வாங்கிய முதல் 1,500 கி.மீ. தூரத்திற்கு நன்றாக இருந்தது. இதையடுத்து ஒரு நாள் பாதிவழியில் கார் நின்றுவிட்டது. இதனால் எனது காரை லாரியில் டோ செய்து சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றேன்.

மெக்கானிக் கடை

மெக்கானிக் கடை

ஒரு மாதத்திற்கு மேலாக மெக்கானிக் கடையிலேயே இருந்தது. பின்னர் ஒரு நாள் மெக்கானிக்கிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் காரை ரிப்பேர் செய்ய முடியாது. கார் மீண்டும் இயங்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு அதன் முழு பேட்டரியை மாற்ற வேண்டும் என்றார்.

17 லட்சம் ரூபாய்

17 லட்சம் ரூபாய்

சரி பேட்டரி வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும் என கேட்டேன். அதற்கு அவர் 20 ஆயிரம் யூரோஸ் (இந்திய மதிப்பில் 17 லட்சம் ரூபாய்) ஆகும் என்றார். ஏதாவது வாரண்டி, கியாரண்டி இருக்கிறதா என கேட்டேன். எதுவும் இல்லை என சொல்லிவிட்டார்கள். இதையடுத்து நான் நேரில் வந்து காரை எடுத்துக் கொள்கிறேன் என தெரிவித்துவிட்டேன்.

மெக்கானிக் கடை

மெக்கானிக் கடை


மேலும் அந்த மெக்கானிக் கடைக்கு சென்று காரை வெடிக்க செய்ய போகிறேன் என கூறிவிட்டேன். இதையடுத்து காரை ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடத்திற்கு கொண்டு சென்றேன் என்றார். அவர் கோபத்தில் சொல்கிறார் என பார்த்தால் நிஜமாகவே காரை சுற்றி 30 கிலோ வெடிப் பொருட்களை வைத்தார். அப்போது ஒரு ஹெலிகாப்டர் அவ்வழியாக பறந்தது. அதில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் ஹெல்மெட் அணிந்த புகைப்படத்தை கீழே போட்டது.

டெஸ்லா கார்

டெஸ்லா கார்

அது சரியாக வெடிக்கச் செய்வதற்காக வைக்கப்பட்ட டெஸ்லா காரின் டிரைவர் சீட்டில் விழுந்தது. இதையடுத்து காரின் ஓனர் உள்ளிட்டோர் பதுங்குகுழியில் சென்றுவிட்டனர். காரை வெடிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நபர் கடைசியாக ஒரு முறை தூமஸ் கடைனெனிடம் காரை வெடிக்கச் செய்வதிலிருந்து பின்வாங்குகிறீர்களா என கேட்டார். அதற்கு அவர் அதெல்லாம் கிடையாது. நீங்கள் வெடிக்கச் செய்யலாம் என கூறிவிட்டு 1, 2, 3 என கூறிய போது கார் வெடித்துச் சிதறியது. இந்த வீடியோ வைரலானது. டெஸ்லா காரை வைத்திருந்ததை விட தற்போதுதான் சந்தோஷமாக இருப்பதாக கடைனென் தெரிவித்தார். மேலும் இந்த உலகிலேயே டெஸ்லா காரை வெடி பொருள் வைத்து தகர்த்த ஒரே ஆள் நான்தான். இது வரலாற்றில் இடம் பெறும் என்றார். என்ன இருந்தாலும் தூமஸ் கடைனெனுக்கு இத்தனை கோபம் ஆகாது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+