பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு.. 6 ஆசிரியைகளின் அசிங்கமான செயல்.. அதிரடி கைது.. அலறும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து 6 ஆசிரியைகள் பாலியல் உறவு வைத்திருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் 6 ஆசிரியைகளும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை மையப்படுத்தி அந்த நாட்டின் உள்ளேயும், வெளியேயும் நடக்கும் பிரச்சனைகள் அவ்வப்போது பூதாகரமாக வெடிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தான் தற்போது அமெரிக்கா நாட்டின் உள்ளே ஒரு பிரச்சனை பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது பள்ளி மாணவர்கள்-ஆசிரியைகள் இடையேயான உறவு தான் தற்போது அங்கு சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஆசிரியைகள் மீது தொடர்ந்து எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் தான். இந்த குற்றச்சாட்டில் கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
அமெரிக்காவின் டான்வில்லியை சேர்ந்தவர் எலன் ஷெல் (வயது 38). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். இவர்கள் 2 மாணவர்களுடன் முறைதவறிய உறவில் ஈடுபட்டுள்ளார். 2 மாணவர்களுக்குடன் 6 முறை பாலியல் உறவு வைத்துள்ளார். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கேட்டு ஷாக் ஆகினார். இதுதொடர்பான புகாரில் எலன் ஷெல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் ஆர்கன்சாஸ் ஆசிரியை ஹீதர் ஹேர் (32). இவரும் பள்ளியில் மாணவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். அதேபோல் ஓக்லஹோமாவைச் சேர்ந்த ஆசிரியையான எமிலி ஹான்காக் (26) என்பவரும் ஒரு மாணவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். இதையடுத்து இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் லிங்கன் கவுண்டியில் உள்ள பள்ளியின் ஆசிரியையான டெலானி ஹான்காக், 15 வயது மாணவனுடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். இவர் பள்ளியில் வைத்தே மாணவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியையான கிறிஸ்டன் காண்ட் (36) என்பவர் டீன் ஏஜ் மாணவியுடன் 5 முறை பாலியல் உறவில் இருந்துள்ளார். அவரும் கைது செய்பய்பட்டார்.
மேலும் ஜேம்ஸ் மேடிசன் பள்ளி ஆசிரியை அல்லி கெரட்மண்ட் (33) என்பவரும் மாணவியுடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் எழுந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதுதவிர பென்சில்வேனியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் பெண் பயிற்சியாளர் ஹன்னா மார்த் (26). இவர் நார்தாம்ப்டன் பள்ளியில் பணியாற்றி வந்தார். இவர் தன்னிடம் பயிற்சி பெற்ற 17 வயது மாணவருடன் பாலியல் உறவு வைத்துள்ளளார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications