அமெரிக்காவில் பயங்கரம்.. 6 வயது முஸ்லீம் சிறுவன் கொடூர கொலை.. ஹமாஸ் - இஸ்ரேல் போருடன் தொடர்பு?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் மற்றும் அவரது தாயாரை வீட்டின் உரிமையாளர் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் சிறுவன் பலியானான். ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போரால் ஏற்பட்ட வெறுப்புணர்வு குற்றமாக இது இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் சிகாகோ நகரின் மேற்கு பகுதியில் வசித்து வந்த 32 வயது பெண் மற்றும் அவருடைய 6 வயது மகனை அவர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார். 26 முறை கத்தியால் குத்தப்பட்ட 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த கொடூர கொலையை அந்த இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரே நிகழ்த்தியதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Shocking incident in America, 6-year-old Muslim boy brutally murdered by landlord

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் ஏற்பட்ட வெறுப்பை அடுத்து 71 வயதான வீட்டு உரிமையாளர் ஜோசப் ஸூபா என்பவர்தான் இந்த மனிததன்மையற்ற செயலில் ஈடுபட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது. நெஞ்சை உறைய வைக்கும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொலை சம்பவம் தொடர்பாக அமெரிக்க நபர் மீது கொலை மற்றும் வெறுப்பு குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இல்லினாய்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அமெரிக்காவை அதிரவைத்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் அவசர அழைப்பு தொடர்பு எண்ணான 911 க்கு அழைப்பு வந்தது. அதில், வீட்டு உரிமையாளுருடன் ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து அவர் தன்னையும் தனது 6 வயது மகனையும் கத்தியால் குத்தியதாக தெரிவித்தார்.

இதையடுத்து விரைந்து சென்ற அதிகாரிகள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 26 முறை கத்தியால் குத்தப்பட்டதில் 6 வயது சிறுவன் பலியானான். அந்த சிறுவனின் தாயார் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லீம் என்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்"என்றார். எனினும் உயிரிழந்த சிறுவன் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுவனின் தாயார் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+