அமெரிக்காவில் பிறந்த நாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு.. கால்பந்து வீரர் உள்பட 4 பேர் பலி.. சோகம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்த நாள் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களை நோக்கி திடீரென ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் அவ்வப்போது திடீரென நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அந்த நாட்டை அதிர வைத்து வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனைவருக்கும் அனுமதி உள்ள நிலையில், இதற்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று தற்போதும் குரல் வலுத்து வருகிறது.

இது ஒருபக்கம் இருந்தாலும் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைந்தபாடில்லை. நடப்பு ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இதுவரை பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் 143 முறை நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் எந்த அளவிற்கு துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து இருப்பது என்பதற்கு இதுவே சான்றாகும்.
இந்த நிலையில், அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணமான அலபாமாவில் உள்ள தாட்வில்லே நகரில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஒரு நடன விடுதியில் 16 வயது நபர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் பலரும் சிறுவர்கள் சிறுமியர்கள் ஆவர்.
இந்த நிலையில், திடீரென ஒருவர் பிறந்த நாள் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயம் அடைந்துள்ளனர். பிறந்த நாள் பார்ட்டியின் போது ஏற்பட்ட தகராறில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்று இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
எனினும், இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான கரணம் குறித்து உறுதியான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அதிகரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த தகவலும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் டீன் ஏஜ் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் மருத்துவமனைக்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications