ஜேம்ஸ் வெப் கொடுத்த முக்கிய ஆதாரம்.! சூரிய குடும்பத்திற்கு வெளியே உயிரினங்கள்? வியப்பில் விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: சூரியக் குடும்பத்திற்கு வெளியே முதல்முறையாக உயிரினங்கள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போல எந்தெந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நாசா இதில் தீவிரமாகவே இறங்கி உள்ளது.
விண்வெளி குறித்துக் கூடுதல் ஆய்வுகளை முன்னெடுக்க அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து ஜேம்ஸ் வெப் என்ற டெலஸ்கோப்பை விண்ணுக்கு அனுப்பி உள்ளனர்.

கார்பன் டை ஆக்சைடின்
அது இப்போது பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் கிரகங்களைத் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பி வருகிறது. இப்போது ஜேம்ஸ் வெப் அனுப்பி உள்ள புதிய படத்தில் பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் முதல் முறையாக கார்பன் டை ஆக்சைடின் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

பெரியது
இந்த கண்டுபிடிப்பு WASP-39 என்ற அந்த கிரகம் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய உதவும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த WASP-39 கிரகம் சூரிய கிரகத்தில் இருக்கும் வியாழனை விடக் குறைவான எடை கொண்டது. இருப்பினும், அதன் சைஸ் வியாழன் கிரகத்தை விட 1.3 மடங்கு பெரியதாகும். இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேறு வாயுக்கள்
இது குறித்து பிரான்ஸ் நாட்டின் வானியற்பியல் நிபுணரான பியர்-ஆலிவர் லகேஜ் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, இது சூப்பர்-எர்த்ஸ் (பூமியை விட பெரிய ஆனால் நெப்டியூனை விட சிறியது) பற்றிய வரும் கால ஆய்வுகளை நடத்தப் பெரியளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிரகத்தில் இப்போது கார்பன் டை ஆக்சைட் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில், வேறு வாயுக்கள் அங்கு உள்ளதா எனக் கண்டறியும் முயற்சியிலும் இறங்கி உள்ளோம்" என்றார்.

மிக அருகே
இந்த கிரகம் சுற்றி வரும் நட்சத்திரத்தில் இருந்து அருகிலேயே உள்ளது. பூமியில் 4 நாட்கள் நிறைவடையும் முன்னரே, இந்த கிரகம் அதன் நட்சத்திரத்தை முழுமையாக ஒரு முறை சுற்றி வந்துவிடுகிறது. இந்த WASP-39 குறித்து தொடர்ச்சியாக பல காலமாகவே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இந்த கிரகத்தில் நீராவி, சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை கண்டறியப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications