விண்வெளிக்கு பறக்கும் இந்திய பெண்மணி... சாதனை நிகழ்த்த தயாராகும் சிரிஷா பந்தலா..!
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சிரிஷா பந்தலா என்ற பெண்மணி, விண்வெளி பயணம் மேற்கொண்டு சாதனை நிகழ்த்தவுள்ளார்.
Recommended Video
ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த சிரிஷா பந்தலா, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் தான் வளர்ந்தார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலட்டிக் யூனிட்டி என்ற விண்கலம் மூலம் இம்மாதம் விண்வெளிக்கு பறக்கவிருக்கிறார். கல்பனா சாவ்லாவுக்கு பிறகு விண்வெளி பயணம் மேற்கொள்ளும் 2-வது பெண்மணி ஆவார்.

விண்வெளியில் கால்பதித்த இரண்டாவது இந்திய பெண் என்ற பெருமையை அவர் அடையவுள்ளார். விர்ஜின் கேலடிக் விண்கலத்தில் சிரிஷா பந்தலாவுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பறக்கவுள்ளனர். கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பு கிடைத்தமைக்காக இந்திய வம்சாவளி பெண்ணான சிரிஷாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஜூலை 11-ம் தேதி நியூ மெக்ஸிகோவில் இருந்து இந்த விண்வெளி பயணம் தொடங்கவிருக்கிறது. அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அமைப்பானது கடந்த வாரம் தான் விர்ஜின் கேலட்டிக் விண்கல நிறுவனத்திற்கு ஒப்புதலே அளித்தது.
விண்வெளிக்கு பறக்கவிருக்கும் சிரிஷா பந்தலா, கடந்த 2015-ம் ஆண்டு விர்ஜின் கேலட்டிக் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் ஏரோ நாட்டிக்கல் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார்.
சிரிஷா பந்தலாவுக்கு முன்னதாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் என எடுத்துக்கொண்டால் மொத்தமே 3 பேர் தான். கல்பனா சாவ்லா, ராகேஷ் சர்மா, சுனிதா வில்லியம்ஸ், ஆகியோருக்கு பிறகு சிரிஷா இந்த சாதனையை நிகழ்த்திக்காட்டவுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications