"மோதித்திட்டாங்க".. பைலட் சொன்ன வார்த்தை.. ஓடுதளத்தில் 2 விமானங்கள் மோதியது எப்படி? ஆடியோ

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் 172 பேருடன் சென்ற பயணிகள் விமானமும், சரக்கு விமானமும் ஒன்றொடொன்று மோதிக்கொண்டது. இந்த விபத்து எப்படி நடந்தது? விபத்தை தவிர்க்க அதிகாரிகள், பைலட்டுகள் போராடினாலும் அதையும் மீறி இருவிமானங்களும் மோதிக்கொண்டது எப்படி? என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது. கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பைலட்டுகள் இடையே நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ விவரங்கள் வெளியாகி உள்ளன.

somebody-hit-us-how-did-2-plane-collide-in-us-airport-pilots-chilling-audio-release

பானாமா நாட்டின் பனாமா நகரில் இருந்து 'கோபா ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக பயணிகள் விமானம் அமெரிக்காவிற்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 166 பயணிகள், 6 பணியாளர்கள் என்று மொத்தம் 172 பேர் இருந்தனர்.

இந்த விமானம் அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு தரையிறங்கி ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானமும், ஓடுதளத்தில் இருந்து கோலம்பியாவின் போகோடா நகருக்கு புறப்பட்ட UPS ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 என்ற சரக்கு விமானமும் மோதிக்கொண்டன.

இதில் பயணிகள் விமானத்தின் இறக்கை மோதியதில் சரக்கு விமானத்தின் முன்புற மூக்கு பகுதியில் ஓட்டை விழுந்தததோடு 2 பயணிகள் காயமடைந்தனர். இந்த விமானங்கள் எப்படி மோதிக்கொண்டன? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் விமானங்கள் ஒன்றொடொன்று மோதியபோது என்ன நடந்தது. பைலட் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இடையே நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ விவரங்கள் வெளியாகி உள்ளன. 2 விமானங்களும் ஓடுபாதையில் மெதுவாக நகர்ந்து வந்தன. திடீரென்று இரு விமானங்களும் நெருங்கி வந்தன.

இதனை அறிந்ததும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை சேர்ந்த அதிகாரி யுபிஎஸ் சரக்கு விமானத்திற்கு முக்கிய அறிவுரையை வழங்கினார். அவர், ''கோபா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வருகிறது. அதில் மோதாமல் இருக்க வழி விட வேண்டும்'' என்று கூறினார்.

இந்த சமயத்தில் பயணிகள் விமானத்தில் இருந்த பைலட், ''யாரோ எங்கள் மீது மோதிவிட்டார்கள்'' என்று தரை கட்டுப்பாட்டு அதிகாரியிடம் கூறுகிறார். இதை கேட்டவுடன் கட்டுப்பாட்டு மைய அதிகாரி சரக்கு விமானிகளிடம், ''நீங்கள் மோதிவிட்டீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அந்த விமானி, ''ஆம்,நாங்கள் கொஞ்சம் கூடுதலாக முன்னோக்கி சென்றுவிட்டோம். இதனால் அவர்களின் விமான இறக்கைகள் எங்கள் விமானத்தின் மீது மோதிவிட்டது'' என்றார்.

இதற்கிடையே பயணிகள் விமானி கூறுகையில், ''எங்களின் இடதுபக்க இறக்கை காணவில்லை'' என்று கூறவே இரு விமானங்களும் மோதிக்கொண்டது உறுதி செய்யப்பட்டது. அதாவது பயணிகள் விமானத்தின் இடதுபக்க இருக்கை தான் சரக்கு விமானத்தின் முன்புற மூக்கு பகுதியில் மோதியது தெரியவந்தது. கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளின் துரித செயல்பாட்டால் 2 விமானங்களும் லேசாக மட்டுமே மோதிக்கொண்டன. இல்லாவிட்டால் பெரிய விபத்து நடந்து பலி எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக இது தடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+