சர்வதேச விண்வெளி மையத்திற்குள் புகுந்த நுண்ணுயிரி.. விண்வெளி வீரர்களுக்கு சிக்கல்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டு அங்கு விண்வெளி வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்குள் 'Enterobacter bugandensis' என்ற பாக்டீரியா புகுந்துள்ளதாம்.
சூரிய குடும்பத்தில் பூமியை போல உயிர்கள் வாழக்கூடிய கோள்கள் வேறு ஏதேனும் உள்ளதா? என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். விண்வெளியின் தொடர் ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பூமியின் சுற்றுப்பாதையில் (Low orbit) சுற்றி வரும் இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். தகவல் தொடர்பு, சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நடைபெற்றும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது. சுருக்கமாக சொல்வது என்றால் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் வீடு போல இது உள்ளது.
இந்த விண்வெளி மையத்திற்கு கடந்த 6 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்சும் மற்றொரு விஞ்ஞானியான பட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சென்றனர். ஒரு வார காலம் அங்கு தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்கள். புதிய விண்கலத்தை ஆய்வு செய்யும் விதமாக இவர்களது பயணம் அமைந்தது.
சர்வதேச விண்வெளி மையத்தில் மேலும் 7 விஞ்ஞானிகள் நீண்ட காலமாக தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். வழக்கமாக விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு விண்வெளி குப்பைகள் மற்றும் சிறிய விண்கற்களே அச்சுறுத்தலாக இருக்கும். ஆனால் தற்போது புதிய அச்சுறுத்தல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் 'Enterobacter bugandensis' என்ற பாக்டீரியா உள்ளதாம்.
மருந்துகளுக்கு கட்டுப்படாத இந்த பாக்டீரியா, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சூழலில் மேலும் அதிக வீரியம் மிக்கதாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த பாக்டீரியா சுவாச அமைப்புகளை பாதிக்குமாம். இந்த சூப்பர் பக்ஸ்கள் வேறொரு கிரகத்திலோ அல்லது விண்வெளியில் இருந்த உயிரினம் இல்லை எனவும், விண்வெளிக்கு வந்த வீரர்களிடம் இருந்து கண்டறிய முடியாத நிலையில் இது வந்து இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்படும் இந்த சூப்பர் பக் நாசா விஞ்ஞானிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications