கடைசி நேரத்தில் ஸ்பேஸ்எக்ஸ் திட்டம் ரத்து! சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் தொடரும் சிக்கல்
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் கிட்டதட்ட 9 மாதங்களாகவே விண்வெளியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர்களை அமெரிக்கா அழைத்து வரவும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்று வீரர்களையும் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் நாசா அனுப்பவிருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள மூத்த விண்வெளி வீரர்களில் ஒருவர் சுனிதா வில்லியம்ஸ்.. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே 2 முறை நாசாவுக்காக விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார். கடந்த 2006 மற்றும் 2012 ஆகிய இரண்டு முறை அவர் விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார். இதற்கிடையே அவர் கடந்தாண்டு 3வது முறையாக விண்வெளிக்குப் புறப்பட்டார்.

விண்வெளி வீரர்கள்
அவருடன் புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரரும் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றனர்.. போயிங் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் அவர்கள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். முதலில் அவர்கள் 8 நாட்களில் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு பூமி திரும்புவதாக இருந்தது. இருப்பினும், போயிங் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியாமல் போனது.
முன்பெல்லாம் நாசா தனது சொந்த விண்கலம் மூலமாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும். ஆனால், இப்போது செலவுகளைக் குறைக்க நாசா தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸை போயிங் ராக்கெட் மூலம் நாசா அனுப்பியது. அதில் இருந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாத நிலையில், போயிங் ராக்கெட் மட்டும் தனியாகப் பூமிக்குத் திரும்பியது.
டிரம்ப் உத்தரவு
இதற்கிடையே அதிபரான டிரம்ப், இரு வீரர்களும் விண்வெளியில் சிக்கித்தவிக்க பைடன் நிர்வாகமே காரணம் எனச் சாடினார். மேலும், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் அவர்கள் பூமிக்கு அழைத்து வருவார்கள் என அறிவிக்கப்பட்டது. டிரம்ப் உத்தரவின் பெயரில் இந்த பணியை முன்கூட்டியே நடத்தவும் திட்டமிட்டனர்.
ஸ்பேஸ்எக்ஸ் விமானம்
அதன்படி புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை விண்வெளியில் ஏவப்பட்டு இருந்தது. அந்த ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட மாற்றுக் குழுவினரையும் ஏவ திட்டமிட்டிருந்தனர். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த இரு வீரர்களும், ஜப்பான் மற்றும் ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த தலை ஒரு வீரரும் இருந்தனர்.
கடைசி நேரத்தில் ரத்து
இருப்பினும், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவப்படுவது ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து இந்த ராக்கெட் எப்போது ஏவப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதம் ஆகியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications