ஓ மை கடவுளே.. "என் விந்தணுக்களுக்கு டிமாண்டு ஜாஸ்தி".. ஓபனாகவே போட்டுடைத்த எலான் மஸ்க் அப்பா
விந்தணு தானம் செய்ய தயார் என்று எலான் மஸ்க்கின் தந்தை அறிவித்துள்ளார்
வாஷிங்டன்: என்னுடைய விந்தணுவுக்கு கிராக்கி அதிகம் இருப்பதால், விந்தணு தானம் செய்ய தயார் என்று எலான் மஸ்க்கின் அப்பா பகிரங்கமாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க்.. உலகின் கோடீஸ்வரர் லிஸ்ட்டில் டாப்பில் உள்ளவர்.. இவரது தந்தை எரோல் மஸ்க்.
இவர் மீது அடிக்கடி சர்ச்சைகளும், பரபரப்புகளும் கிளம்பி கொண்டே இருக்கும்.. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய 35 வயது வளர்ப்பு மகளுடன் ரகசியமாக குழந்தை பெற்றுக்கொண்டதாக சோஷியல் மீடியாவில் திடீரென செய்திகள் பரவி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இனப்பெருக்கம்
எரோல் மஸ்க்குக்கு 76 வயதாகிறது.. தென் ஆப்ரிக்காவில் என்ஜினியராக பணியாற்றுபவர்.. இப்படித்தான் சமீபத்தில், ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "நாம் பூமியில் இருப்பதற்கு ஒரே காரணம் இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டுமே" என்று கூறியிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.. இந்நிலையில், மறுபடியும் ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார் எரோல் மஸ்க்.. 'தி சன்' என்ற கொலம்பியன் நிறுவனம் அவரிடம் ஒரு பேட்டி எடுத்துள்ளது.

விந்தணு தானம்
அதாவது, புதிய தலைமுறைகளை உருவாக்குவதற்காக, தன்னை விந்தணு தானம் அளிக்கச்சொல்லி அணுகியதாக அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்... எரோல் மஸ்க் அந்தப் பேட்டியில் கூறியுள்ளதாவது: ''உயர் வர்க்க கொலம்பியன் பெண்களை கருவுறச்செய்ய என்னுடைய விந்தணுவை தானம் அளிக்கச்சொல்லி கொலம்பியன் நிறுவனம் ஒன்று என்னை அணுகியது... எலானை உருவாக்கிய நபரே இருக்கையில் ஏன் எலானிடம் செல்லவேண்டும்?

ஹோட்டல்களில் வசதி
விந்தணு தானம் செய்ய தனக்கு எந்த தொகையும் வழங்குவதாக அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை.. அதற்கு ஈடாக, முதல் வகுப்பு பயணம் மற்றும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க முன்வந்தது" என்று தெவித்துள்ளார்.. இந்த தகவல் வேகமாக இணையத்தில் பரவியதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் எரோலை ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.. ஒருசிலர், அவர் சொன்னதில் என்ன தப்பு? இது இயற்கைதானே? என்று ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்..

கேலி - கிண்டல்
மேலும் சிலரோ, இந்த வயதில் இதுபோன்ற பேச்செல்லாம் தேவையா? என்றும் விமர்சித்து வருகின்றனர்... முன்னதாக, 73 வயதான எலான் மஸ்க்க்கின் தந்தை எர்ரான் மஸ்க், மூன்று வயதில் தனக்கு குழந்தை இருப்பதை சமீபத்தில் அறிவித்திருந்தார்.. இதற்கு நெட்டிசன்கள் எலான் மஸ்க்கையே உருவாக்கியவர் நீங்கள் இன்னும் எத்தனை எலான் மஸ்க்கை உருவாக்குவீர்கள் என்று கேலியும் கிண்டலும் செய்திருந்த நிலையில், இப்போது அதை அவர் மறுத்துள்ளார்.. பரவி வரும் தகவல் அத்தனையும் பொய், வதந்தி என்றும் விளக்கம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications