"ரொம்ப மோசம்!" ஒரே ரிப்போர்ட்டால் காலியாகும் பைடன் அரசியல் வாழ்க்கை? பேரிடியாக வந்த பரபர ரிப்போர்ட்
வாஷிங்டன்: ரகசிய ஆவணங்களைக் கையாண்டதாக அமெரிக்க அதிபர் பைடன் மீது நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாகப் பரபர அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக பைடன் இருக்கிறார். அங்கே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் பைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே அவர் ரகசிய ஆவணங்களை முறைகேடாகக் கையாண்டதாகப் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை விசாரணையை வலியுறுத்தியது. அதன்படி அமெரிக்க அதிபர் பைடன் மீது விசாரணையும் நடத்தப்பட்டது.
ரிப்போர்ட்: இதற்கிடையே ரகசிய ஆவணங்களை முறைகேடாகக் கையாண்டு தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்ட விஷயங்கள் அதிபர் பைடன் வயது மற்றும் நினைவாற்றல் பற்றிய விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. மேலும், அங்கே இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், தேர்தல் முடிவுகளையே இது மொத்தமாகப் புரட்டிப் போடுவதாக அமையும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அந்த அறிக்கையில் அதிபர் ஜோ பைடனின் நினைவாற்றல் தொடர்பாகக் கவலைக்குரிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. "மங்கலான", "தெளிவில்லாத," நினைவாற்றல் 81 வயதான பைடனுக்கு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், தனது வாழ்நாளில் நடந்த முக்கிய தருணங்களை நினைவுபடுத்துவதில் கூட பைடனுக்கு சிரமம் நிலவுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக பைடனால் அவர் எப்போது ஒபாமா காலத்தில் துணை அதிபராக இருந்தார்.. அவரது மகன் விபத்தில் உயிரிழந்தது எப்போது உள்ளிட்ட தகவல்களைக் கூட நினைவில் கொள்ள முடியவில்லையாம்.
நினைவாற்றல் மோசம்: அந்த அறிக்கையில், "அவர் துணை அதிபராக இருந்த காலம் அவருக்கு நினைவில் இல்லை, அவரது பதவிக்காலம் எப்போது தொடங்கியது எப்போது முடிந்தது என்பதை மறந்துவிட்டார்.. அவரது மகன் பியூ எப்போது உயிரிழந்தார் என்பதைக் கூட மறந்துவிட்டார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஒபாமா அதிபராக இருந்த 2009-2017 வரை காலகட்டத்தில் ஜோ பைடன் துணை அதிபராக இருந்தார். அதன் பிறகு 2021 அதிபராக அவர் பதவியேற்றார். இடைப்பட்ட 2018- 2020 காலகட்டத்தில் அவர் சீக்ரெட் ஆவணங்களை அவர் வைத்திருந்தார் என்பதே புகார். இந்தக் காலகட்டத்தில் அவர் ஆப்கானிஸ்தான் ராணுவம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய ஆவணங்கள் "வேண்டுமென்றே" தக்கவைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சீக்ரெட் ஆவணங்கள்: அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்திற்குச் சென்றிருக்க வேண்டிய அந்த ஆவணங்கள் எல்லாம் ஏதேதோ இடத்திற்குச் சென்றதாகவும் தனியார் நிறுவனத்தின் கைவசம் கூட சென்றதாகவும் அந்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா குறித்த அந்த ரகசிய ஆவணங்கள் ஏதோ சாதாரண பேப்பர்களை போல கேராஜ்ஜில் இருக்கும் படங்கள் கூட வெளியானது. இதற்கெல்லாம் பைடனின் மோசமான நினைவாற்றலே காரணம் என்று கூறப்பட்டு உள்ளது.
நடவடிக்கை தேவையில்லை: அதாவது பைடன் ரகசிய ஆவணங்களை மோசமாகக் கையாண்டது உறுதியானாலும் கூட அவர் மீது கிரிமினல் நடவடிக்கை தேவையில்லை என்று அந்த கமிஷன் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. பைடன் விசாரணையின் போதும் கூட தன்னை மோசமான நினைவாற்றலைக் கொண்ட வயதான நபர் என்பது போலவே காட்டிக் கொண்டார் என்றும் இதனால் அவர் மீது நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டாலும் அவர் வேறு ஆதாயத்திற்காக இப்படிச் செய்தார் எனச் சொல்ல முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
முடிவுக்கு வரும் அரசியல் வாழ்க்கை? கிரிமினல் நடவடிக்கை இல்லை என்பது பைடனுக்கு நிம்மதியைக் கொடுத்தாலும் கூட இந்த ரிப்போர்ட்டில் பைடன் நினைவாற்றல் மோசமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது அதிபர் தேர்தலில் அவருக்குப் பின்னடைவைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே சமீபத்தில் வெளியான சர்வேயில் சுமார் 77% அதிபர் பதவியில் தொடர பைடன் மிகவும் வயதான நபராக இருப்பதாகக் கருதுவதாகக் கூறியிருந்தனர். இந்த நேரத்தில் ரிப்போர்ட்டும் இப்படி வந்துள்ளது அவருக்குத் தேர்தல் சமயத்தில் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை! -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்!












Click it and Unblock the Notifications