பூமியின் சொர்க்கம்.. இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு ஆயுசு கெட்டியாம்.. எந்தெந்த இடங்கள் பாருங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பூமியில் சில பகுதிகளில் நீண்ட நாட்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ஆயுசு கெட்டியுடன் வாழ்வதற்கான சூழல் உள்ள இடங்களை நீல மண்டலங்கள் (Blue Zones) என்று அழைக்கிறோம். பூமியில் எந்தெந்த நாட்டில் இந்த இடங்கள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

பூமியில் எல்லா இடமும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. ஒருபக்கம் அதிக வெப்பம் என்றால் மற்றொரு பக்கம் அதிகமான குளிர் பிரதேசமாக உள்ளது. இன்னொரு பக்கம் நீரால் சூழப்பட்டுள்ளது என்றால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாலைவனமாகவே காட்சியளிக்கும் பகுதியும் உள்ளது.
அதேபோல இடம் , காலம், வெப்ப சூழலுக்கு ஏற்றார் போல் மனிதனின் பழக்கவழக்கம் உணவுமுறைகள் ஆகியவற்றிலும் வேறுபாடு உள்ளது.

Special Places on Earth Blue Zone People live longest healthiest lives here

அதேபோல், மனிதன் வாழ்நாள் எண்ணிக்கையிலும் வேறுபாடுகள் உள்ளன. சில பகுதிகளில் நீண்ட நாட்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மனிதர்கள் வாழ்கிறார்கள். பூமியின் இந்த பகுதிகளை நீல மண்டலங்கள் (Blue Zones) என்று அழைக்கிறோம். இந்த பகுதி மக்கள் அதிகமாக இயற்கையான உணவுகளை உட்கொள்கிறார்கள். பதப்படுத்தப்படும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொல்வது இல்லை.

அதேபோல், ரெகுலர் உடற்பயிற்சி சமூகத்துடன் தொடர்பில் இருத்தல் ஆகியவற்றையும் மறக்காமல் கடைபிடிப்பார்கள். இப்படியான புளூ சோன் பகுதிகளை விஞ்ஞானிகள் கியான்னி பேஸ் மற்றும் மைக்கேல் பவுலைன் முதலில் கண்டுபிடித்தார்கள். பிறகு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கீழ்க்கண்ட இடங்கள் பட்டியலிடபட்டுள்ளன. அவற்றை பார்க்கலாம்.

சார்டினியா இத்தாலி:இத்தாலி நாட்டில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமம் இயற்கை எழில் கொஞ்சும் அழகினை கொண்டது. இங்கு வசிக்கும் ஆண்கள் 100 வயதையும் தாண்டியும் வாழ்கிறர்களாம். கால்நடைகளை மேய்க்கும் பணியில் ஈடுபடும் இங்குள்ள மக்கள் ஈடுபடுகிறார்கள். தினமும் 5 6 கி.மீட்டர் தூரம் நடக்கிறார்கள். பெரிதும் தாவர உணவு வகைகளையே அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஓக்கினாவா தீவு: ஜப்பானின் ஒக்கினா தீவில் பெண்கள் சராசரி ஆயுளை விட அதிகம் வாழ்கிறார்கள். டோஃபூ, கடற்பாசி,மிசோ போன்ற உணவு பொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

லோமா லிண்டா, அமெரிக்கா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லோமா லிண்டா பகுதியில் வசித்து வருபவர்களின் ஆயுட் காலம் சக அமெரிக்கர்களை விட கூடுதலாக 10 ஆண்டுகளாகும். தாவர வகை உணவுகளையே அதிகம் உள்கொள்ளும் இவர்கள், புகை பிடித்தல், மது அருந்துந்தல் போன்ற எந்த தீய பழக்கங்களுக்கும் ஆட்படாதவர்களாக இருக்கிறார்கள். நாள் தோறும் ஆக்டிவாக இயங்கக் கூடியவர்களாகவும் இவர்கள் உள்ளனர். ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டிற்கும் இங்கு வாழும் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம். இதுவே அவர்கள் நீண்ட நாட்கள் வாழக்காரணம் ஆகும்.

நிகோயோ, கோஸ்டோ ரிக்கா: மத்திய அமெரிக்காவில் நாடான கோஸ்டோ ரிக்காவில் நவீன வாழ்க்கை முறையை மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். ஆனாலும் இங்குள்ள மக்கள் சராசரியாக 85 வருடங்கள் வரை வாழ்கிறார்களாம். பெரியவர்களுடன் ஒன்றாக கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார்களாம். பதப்படுத்தப்படாத உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகள், ரெகுலரான உடற்பயிற்சி என முறையாக உடல் நலனை பேணுகிறார்கள். செல்வம் என்பது வெறும் பணம் மட்டும் இல்லை என்பதை காட்டும் விதமாக இவர்களின் வாழ்க்கை முறை இருகுமாம்.

இகாரியா, கிரீஸ்: கிரீஸ் நாட்டில் உள்ள இகாரியாவில் அழகிய இயற்கை வளம் கொண்ட பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் 90 வயது வரை அதிகம் பேர் வாழ்கிறார்கள். வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதி உள்ளிட்ட பிரச்சினைகளும் இங்குள்ளவர்களுக்கு குறைந்த விகிதத்திலேயே உள்ளது. மலைப்பகுதிகள் நிறந்த பகுதி என்பதால் அவர்கள் வாழ்வியல் முறையே உடலுக்கு வலுசேர்க்கும் விதமாக இருக்கிறது. காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுகளையே அதிகம் எடுத்துக்கொள்வார்களாம்.

மதியத்திற்கு பிறகு குட்டி தூக்கம் போடுவதை வழக்கமாகவே கையாளுவார்களாம். இதன் மூலம் அவர்களுக்கு மன அழுத்தங்கள் குறைந்து இதய பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் குறைவாக உள்ளது. இந்த புளு மண்டலங்களில் நீண்ட ஆயுட்காலம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்கை முறை என்பது பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை. தங்கள் சமூகத்தினருடன் ஆழமாக ஒருங்கிணைந்து செயலப்டுவது, சுற்றுசூழலுடன் இணக்கமான உறவை கடைபிடிப்பது போன்றவையே காரணம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+