ரூ.15,000 கோடி செட்டில்மென்ட்? உலகின் 4-வது காஸ்ட்லி விவாகரத்தாக மாறிய ஸ்ரீதர் வேம்பு விவகாரம்.!
வாஷிங்டன்: ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் விவாகரத்து குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாகவே பேசுபொருளாகி வருகிறது. இது உலகின் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது. இதுவரை உலகளவில் நடந்த டாப் காஸ்ட்லி விவாகரத்துகள் குறித்த பட்டியலை நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு- பிரமிளா சீனிவாசன் விவாகரத்து வழக்கு இப்போது அமெரிக்காவில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பான வழக்கில் சுமார் 1.7 பில்லியன் டாலர் (சுமார் ₹15,000 கோடி) பாண்ட் தொகை செலுத்த ஸ்ரீதர் வேம்புவுக்கு அமெரிக்க கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

காஸ்ட்லி விவாகரத்து
இந்த விவகாரத்து வழக்கு இப்படியே தீர்ப்பளிக்கப்பட்டால் இது இந்தியர் ஒருவரின் காஸ்ட்லி விவாகரத்து வழக்காக இருக்கும். மேலும், சர்வதேச அளவில் அதிக காஸ்ட்லியான விவாகரத்துகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நீதிமன்ற உத்தரவு கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டாலும், இதன் முழுமையான விவரங்கள் சமீபத்தில் தான் தெரிய வந்தன.
அமெரிக்காவில் ஜோஹோ நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த ஸ்ரீதர் வேம்பு கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் தனது கிராமத்தில் வசித்து வருகிறார். அவரது எளிமையும் கிராமப்புற வளர்ச்சி குறித்து அவருடைய கருத்துகள் இணையத்தில் பரவலாகக் கவனிக்கப்பட்டும். அப்படியிருக்கும்போது அவரது விவாகரத்து வழக்கு இவ்வளவு காஸ்ட்லியாக மாறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாண்ட் தொகை
2024ல் ஸ்ரீதர் வேம்புவின் நிகர மதிப்பு சுமார் 5.85 பில்லியன் டாலராகும். மேலும், அவர் இந்தியாவின் 39வது பெரிய பணக்காரராகவும் இருக்கிறார். ஸ்ரீதர் வேம்பு 1993ஆம் ஆண்டில் பிரமிளா ஸ்ரீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஜோஹோ நிறுவனர் தனது சாப்ட்வேர் நிறுவனத்தைப் பெரும்பாலும் இந்தியாவிலிருந்தே நடத்தி வருகிறார்.
காஸ்ட்லி விவாகரத்துப் பட்டியல்
உலகளவில் காஸ்ட்லி விவாகரத்துகளை பொறுத்தவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவகாரத்து தான் முதலிடத்தில் இருக்கிறது. 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இந்த ஜோடி 2021 மே மாதம் பிரிவதாக அறிவித்தது. இதில் மெலிண்டா கேட்ஸுக்கு பங்குகள், முதலீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சுமார் 73 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. உலகின் வரலாற்றில் இதுவே காஸ்ட்லி விவாகரத்து என சொல்லப்படுகிறது..
அமேசான் நிறுவனர்
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி ஸ்காட் தம்பதியின் 2019ஆம் ஆண்டு விவாகரத்து உள்ளது. ஸ்காட், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகச் சுமார் 38 பில்லியன் டாலர் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு அவர் உலகின் புகழ்பெற்ற சமூக சேவை செய்யும் நபராகத் திகழ்கிறார். தனது முன்னாள் மனைவிக்கு இந்தத் தொகை கொடுத்த பிறகும் கூட ஜெஃப் பெசோஸ் உலகளவில் பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார்.
அடுத்து மூன்றாம் இடத்தில், பிரெஞ்சு- அமெரிக்க கலை டீலர் அலெக் வைல்ட்ஸ்டைன் மற்றும் ஜாக்லின் வைல்ட்ஸ்டைன் வழக்கு இடம்பெறுகிறது. 21 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு 1999இல் இவர்கள் விவகாரத்து பெற்றர். அதில் ஜாக்லின் சுமார் 3.8 பில்லியன் டாலர் பெற்றார். இந்த விவாகரத்து சம்பவம் அப்போது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து இருந்தது.
இந்த ஜோடிகளைத் தவிரவும் சில குறிப்பிடத்தக்கப் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.. மீடியா அதிபர் ரூபர்ட் மர்டோக், தனது 31 வருடத் திருமணத்திற்குப் பிறகு மரியா டோர்வை விவகாரத்து செய்தார். அதற்குச் சுமார் 1.7 பில்லியன் டாலர் செலவிட்டார். இதேபோல் கேசினோ அதிபர் ஸ்டீவ் வின் என்பவர், எலைன் வின் உடனான தனது விவகாரத்தின் போது கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலரை ஜீவனாம்சமாக வழங்கினார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications