பூமிக்கு திரும்பிய ஸ்டார்லைனர்.. 'குட் லக்' வழியனுப்பி வைத்த சுனிதா வில்லியம்ஸ்! காத்திருக்கும் நாசா
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் இன்றி வெறும் கையுடன் பூமிக்கு புறப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்று விண்வெளி வீரர்கள் அவ்வப்போது ஆய்வில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் தான், கடந்த ஜூன் 5-ம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு புறப்பட்டனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை கடந்த ஜூன் 6-ம் தேதி இருவரும் அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர். ஜூன் 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஜூன் 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. விண்வெளி மையத்தில் 90 நாட்களுக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இது எதற்கும் பலன் கிட்டவில்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்தது.
இந்த நிலையில் தான், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை விண்வெளிக்கு ஏற்றிச் சென்ற அந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், யாரும் இன்றி வெறும் கையுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பூமிக்கு புறப்பட்டது. இந்த ஸ்டார்லைனர் விண்கலம் மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி துறைமுகத்தில் தரையிறங்க உள்ளது.
ஸ்டார்லைனர் விண்கலம் பூமியில் தரையிறங்கிய பிறகு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என நாசா விஞ்ஞானிகள் கூறினர். ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை 9.33 மணி அளவில் பூமியை வந்து சேரும். இந்த நிகழ்வு முழுவதும் நேரலையில் ஒளிபரப்பாகும் என நாசா தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு அதாவது, 2025ம் ஆண்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளது. இந்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும் திரும்புவார்கள் என நாசா கூறியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications