விண்வெளியில் பேரழிவு? நடுவானில் வெடித்து சிதறிய ஸ்டார் லிங்க் சாட்டிலைட்.. எலான் மஸ்கிற்கு பிரஷர்
வாஷிங்டன்: எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்டார் லிங்க் நிறுவனம் சாட்டிலைட்கள் மூலம் இணையச் சேவையை வழங்கி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே ஸ்டார் லிங்க் நிறுவனத்திற்குச் சொந்தமான சாட்டிலைட் ஒன்று நடுவானில் வெடித்துச் சிதறி இருக்கிறது. இது விண்வெளியில் உள்ள மற்ற சாட்டிலைட்களுக்கு ஆபத்தாக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது சாட்டிலைட்கள். பூமியைச் சுற்றி வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சாட்டிலைட்கள் நமக்குத் தொடர்ச்சியாகப் பல முக்கியமான தகவல்களைக் கொடுத்து வருகிறது. இப்போது நமது பூமியைக் கிட்டத்தட்டப் பல ஆயிரம் சாட்டிலைட்கள் சுற்றி வருகிறது. பல நிறுவனங்கள் தங்களுக்கான சாட்டிலைட்கள் அனுப்பி வருகின்றன.

ஸ்டார் லிங்க்
அப்படி சாட்டிலைட் மூலம் இணையச் சேவையை வழங்கி வருவது தான் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். பூமியின் தாழ்வு சுற்றுப் பாதை எனப்படும் Low Earth Orbit (அதாவது பூமியில் இருந்து சுமார் 2000 கிமீ வரையிலான தொலைவு) பல ஆயிரம் ஸ்டார்லிங்க் சாட்டிலைட்கள் உள்ளன. இதன் மூலமாகவே ஸ்டார் லிங்க் உலகெங்கும் இணையச் சேவையைக் கொடுத்து வருகிறது.
வெடித்துச் சிதறியது
இதற்கிடையே இந்த ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குச் சொந்தமான சாட்டிலைட் ஒன்று விண்வெளியில் ஒரு சிக்கலைச் சந்தித்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது விண்வெளியில் அது வெடித்துச் சிதறிவிட்டது என்பதையே தான் இப்படிச் சொல்லி இருக்கிறார்கள். சாட்டிலைட் இப்படி திடீரென விண்வெளியில் வெடித்து சிதறியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. அதேநேரம் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் இதுபோல வெடித்துச் சிதறுவது இது முதல் முறையல்ல.. கடந்த டிசம்பர் மாதமும் கூட இதுபோல சாட்டிலைட் ஒன்று வெடித்துச் சிதறி இருக்கிறது.
ஸ்டார்லிங்க் 34343 என்ற சாட்டிலைட் தான் வெடித்துச் சிதறி இருக்கிறது. இந்த வெடிப்பு காரணமாகச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று ஸ்டார்லிங்க் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த சாட்டிலைட் பல ஆயிரம் சிறிய பகுதிகளாக வெடித்துள்ளது. இதை விண்வெளி குப்பைகள் என்பார்கள். இந்த குப்பைகளால் மற்ற சாட்டிலைட்களுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை என்றும் இவை வளிமண்டலத்திலேயே சில வாரங்களில் எரிந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது..
என்ன நடக்கும்
ஸ்டார்லிங்க் சாட்டிலைட்களை பொறுத்தவரை அவை குறிப்பிட்ட காலத்திற்கு இணையச் சேவை வழங்கும். அது முடிந்தவுடன் தானாக முழுமையாகச் சிதைந்துவிடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதற்குள் இந்த விண்வெளிக் குப்பைகள் சுற்றுப்பாதையில் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தக்கூடாது என்றும் ஸ்டார்லிங்க் இதில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதுமே பலரது கருத்தாக உள்ளது..
எச்சரிக்கை
விண்வெளி என்பது எல்லையற்றது போல நமக்கு தோன்றும். ஆனால், இப்போது நாம் பெரும்பாலான சாட்டிலைட்களை அனுப்பும் Low Earth Orbit என்ற பகுதியில் ஏற்கனவே பல ஆயிரம் சாட்டிலைட்கள் இருப்பதால் அங்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த லோவர் எர்த் அர்பிட்டில் பல ஆயிரம் சாட்டிலைட்கள் சுற்றி வருகின்றன. இதனால் ஒரு சாட்டிலைட் வெடித்துச் சிதறினாலும் கூட அது மற்றவற்றைப் பாதிக்கலாம்.. இது ஒரு சங்கிலி நிகழ்வை உருவாக்கி மிகப் பெரிய பேரழிவையே இணையத்தில் உருவாக்கும். இதன் காரணமாகவே ஸ்டார் லிங்க் கூடுதல் கவனத்தோடு இயங்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே ஸ்டார் லிங்க் இந்த பிரச்சினையைச் சந்தித்து வரும் சூழலில், அடுத்த கட்டமாக சுமார் 10 லட்சம் சாட்டிலைட்களை கட்டி விண்வெளியிலேயே ஒரு ஏஐ டேட்டா சென்டரை உருவாக்க உள்ளதாம் ஸ்டார் லிங்க். இருப்பினும், அப்படி 10 லட்சம் சாட்டிலைட்களை அனுப்பினால் அது ஆபத்தை மேலும் அதிகமாக்கவே செய்யும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications